உக்ரேனில் ரஷ்யாவுக்கு ஆதரவான இரண்டு மாநிலங்களை அங்கீகரித்த ரஷ்ய அதிபர் விளேடிமிர் புட்டின், அந்த வட்டாரங்களுக்கு ரஷ்யப் படைகளை அனுப்பியுள்ளார்.
இது அமைதிக்காக்கும் நடவடிக்கை முயற்சி என்று புட்டின் கூறியிருக்கிறார்.
ஆனால் உக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்கப் பொய் சாக்குச் சொல்வதாக அமெரிக்கா கூறியுள்ளது.
ரஷ்யாவின் செயல்கள் உலகெங்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் எச்சிரித்தார். அதிகமான அளவில் உயிர்கள் பலியாகும் என்றும் அவர் கூறினார்.
இந்த நடவடிக்கை மூலம் அமைதி பேச்சுவார்த்தைகளை ரஷ்யா சீர்குலைப்பதாக உக்ரேனிய அதிபர் குறைகூறினார்.


