நாடு தழுவிய பரிசோதனைகளை நடத்த இருக்கும் ஹாங்காங்

நாடு தழுவிய பரிசோதனைகளை நடத்த இருக்கும் ஹாங்காங்

1 mins read
61cf7413-8398-4436-873a-ac014b03d0fe
-

ஹாங்­காங்: ஹாங்­காங்­கில் கொவிட்-19 பாதிப்பு அதி­க­ரித்து வரு­கிறது. கிரு­மிப் பர­வல்

கட்­டுக்­க­டங்­கா­மல் போவ­தற்­குள் அதைக் கட்­டுப்­ப­டுத்த அடுத்த மூன்று மாதங்­க­ளுக்­குள் நாடு தழு­விய கொவிட்-19 பரி­சோ­த­னை களை நடத்த ஹாங்­காங் அதி­கா­ரி ­கள் முடி­வெ­டுத்­துள்­ள­னர்.

இந்­தப் பரி­சோ­தனை ஹாங்­காங்­கில் உள்ள அனை­வ­ருக்­கும் கட்­டா­ய­மாக்­கப்­படும். ஒவ்­வொரு குடி­யி­ருப்­பா­ள­ருக்­கும் மூன்று முறை பரி­சோ­தனை நடத்­தப்­படும்.

வரும் ஏப்­ரல் மாத நடுப்­ப­கு­தி­யி­லி­ருந்து இறுதி வரை சமூக இடை­வெ­ளிக் கட்­டுப்­பா­டு­களில் பெரும்­பா­லா­னவை நடப்­பில் இருக்­கும்.

அமெ­ரிக்கா, பிரிட்­டன், ஆஸ்­தி­ரே­லியா உட்­பட ஒன்­பது நாடு­

க­ளி­லி­ருந்து ஹாங்­காங் வரும் ஒன்­பது விமா­னச் சேவை­க­ளுக்­கான தடை ஏப்­ரல் 20ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­படும் என்று ஹாங்­காங்­கின் தலைமை நிர்­வாகி கேரி லாம் தெரி­வித்­தார்.

ஒரே நேரத்­தில் பல­ருக்கு கொவிட்-19 பரி­சோ­த­னைகளை நடத்­தும் அணு­கு­மு­றையை சீனா இதற்கு முன்பு அடிக்­கடி கடைப்­பி­டித்­துள்­ளது. அதே அணு­கு­

மு­றையை ஹாங்­காங்­கும் பின்­பற்ற இருக்­கிறது. நேற்­றைய நில­வ­ரப்­படி ஹாங்­காங்­கில் மேலும் 6,211 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ள­தாக உறுதி செய்­யப்­பட்­டது.

கொவிட்-19 கார­ண­மாக கடந்த 24 மணி நேரத்­தில் மேலும் 32 பேர் மாண்­டு­விட்­ட­தா­க­வும் 19 பேரின் உடல்­நிலை கவ­லைக்­

கி­ட­மாக இருப்­ப­தா­க­வும் ஹாங்­காங் சுகா­தா­ரத்­துறை நேற்று அறி­வித்­தது.

ஹாங்­காங்­கில் முடக்­க­நி­லையை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும் என்று சீன அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.