சீனாவில் பனிப்புயல் அபாயம்

சீனாவில் பனிப்புயல் அபாயம்

1 mins read
f999ecfa-9ed2-44be-8bbf-46b2af463b59
-

பெய்­ஜிங்: சீனா­வின் சில பகு­தி­களில் பனிப்­பு­யல் ஏற்­படும் அபா­யம் இருப்­ப­தாக அந்­நாட்­டின் வானிலை மைய அதி­கா­ரி­கள் தொடர்ந்து எச்­ச­ரிக்கை விடுத்து வரு­கின்­ற­னர்.

யூனான், குயீசோ, ஹுனான், ஜியாங்சி, ஆன்­ஹுயி, சேஜி­யாங் ஆகிய இடங்­களில் கடு­மை­யான பனிப்­பு­யல் ஏற்­ப­டக்­கூ­டும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது.

25 மில்லி மீட்­டர் அளவு

வரை­யி­லான பனிப்­பொ­ழிவு எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

வீட்­டை­விட்டு வெளியே வர வேண்­டாம் என்­றும் வெளிப்­புற நட­வ­டிக்­கை­க­ளைத் தவிர்ப்­பது நல்­லது என்­றும் குடி­யி­ருப்­பா­ளர்­களை அதி­கா­ரி­கள் கேட்­டுக்­கொண்­ட­னர்.

சாலை­கள், ரயில்­பா­தை­கள், மின்­சா­ரம், தொலைத்­தொ­டர்பு ஆகி­யவை தொடர்­பாக எவ்­வித பாதிப்போ அசம்­பா­வி­தமோ ஏற்­ப­டா­தி­ருக்க தகுந்த முன்­னெச்­

ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் எடுக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. பனிப்­பு­யல் தொடர்­பான எச்­ச­ரிக்கை, மித­மான நிலை­யில் இருந்­த­போ­தி­லும் உயிர்ச்­சே­தம், பொருட்­சே­தம் ஆகி­ய­வற்­றைத் தவிர்க்க சீன அதி­கா­ரி­கள் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.