தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதுமையில் அசத்தும் மெக்டானல்ட்ஸ் சீனா; கொத்தமல்லி ஐஸ்கிரீம் அறிமுகம்

1 mins read
6cbb1a6b-131c-4333-a7d8-29761c7cf4c0
சீனாவில் அறிமுகம் கண்டுள்ள கொத்தமல்லி ஐஸ்கிரீம்.படம்: இணையம் -

பெய்ஜிங்: தனது உண­வுப் பட்­டி­யலில் புதுப்­புது அம்­சங்­க­ளைச் சேர்ப்­ப­தில் பெயர் போனது மெக்­டா­னல்ட்ஸ் சீனா.

அந்த வகை­யில், அதன் பிர­பல 'ஐஸ்­கி­ரீம் சண்டே'வில் கொத்­த­மல்­லி­யைச் சேர்த்­துள்­ளது அந்­நிறு­வ­னம்.

இந்­தப் புது­வ­ர­வைப் பற்றி டுவிட்­ட­ரில் பகிர்ந்­துள்­ளார் பய­னா­ளர் டேனி­யல் அக­மது என்­ப­வர்.

இந்த டுவிட்­டர் பதிவு திங்­கட்­கி­ழமை வெளி­யா­னது. இது­வரை இப்­ப­தி­விற்கு 2,000க்கு மேற்­பட்ட விருப்­பக்­கு­றி­கள் கிடைத்­துள்­ளன.

டுவிட்­டர் பய­னா­ளர்­க­ளி­டம் இருந்து இப்­ப­தி­விற்கு மாறு­பட்ட கருத்­து­கள் வந்­துள்­ளன.

கொத்­த­மல்லி ஐஸ்­கி­ரீமைத் தங்­க­ளுக்­குப் பிடிக்­காது என்று பலர் கருத்து கூறா­விட்­டா­லும் இந்த வித்தியாசமான கலப்பு குறித்து அவர்­கள் குழப்­பம் அடைந்துள்­ள­னர்.

குறிப்­பிட்ட காலத்­திற்கு விற்கப்­படும் இந்­தக் கொத்­த­மல்லி 'ஐஸ்­கி­ரீம் சண்டே' 6.6 யுவா­னுக்கு (S$1.40) விற்­கப்­ப­டு­வ­தாக மெக்­டா­னல்ட்ஸ் சீனா­வின் அதி­கா­ர­பூர்வ இணை­யப் பக்­கத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பொது­வாக, இந்­தி­யர்­கள் சமை­யலில் கொத்­த­மல்­லி­யைப் பயன்­படுத்து­வது வழக்­கம்.

ஆனால், சீனா­வில் உள்ள மெக்­டா­னல்ட்ஸ் உண­வ­கங்­கள் அதை ஐஸ்­கி­ரீ­மில் தூவி விற்­பனை செய்­வது புது­மை­யாக உள்­ளது என்­கின்­ற­னர் இணை­ய­வா­சி­கள்.