உலக மக்களிடையே கடல் உணவுகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால், அடுத்த ஆண்டு முதல் வர்த்தக ரீதியிலான ஆக்டோபஸ் பண்ணையைத் திறக்க ஸ்பானிய நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளது. 2010-2019க்கு இடையில், ஆக்டோபஸ் வர்த்தகத்தின் மதிப்பு $1.30 பில்லியனில் இருந்து $2.72 பில்லியன் அமெரிக்க டாலராக (3.66 பில்லியன் வெள்ளி) உயர்ந்துள்ளதாக ஐநாவின் உணவு, வேளாண்மை அமைப்பின் தரவுகள் கூறுகின்றன. இந்நிலையில், 2026க்குள் ஆண்டிற்கு 3,000 டன் ஆக்டோபஸை உற்பத்தி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால் வர்த்தக ரீதியிலான இந்த முயற்சி ஒரு சுற்றுச்சூழல் பேரழிவாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஸ்பெயின் ஆய்வகம் ஒன்றில் ஆக்டோபஸைக் கையாளும் ஊழியர்.
படம்: ராய்ட்டர்ஸ்

