சிங்கப்பூரில் கிருமித் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், இன்று நடப்புக்கு வரவேண்டிய புதிய கொவிட்-19 நடைமுறைகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.
சீரமைக்கப்பட்ட நடைமுறைகள் எப்போது நடப்புக்கு வரும் என்பது கூடியவிரைவில் அறிவிக்கப்படும் என சுகாதார அமைச்சு கூறியது.
சிங்கப்பூரர்கள் நடைமுறைகளை எளிதில் புரிந்து கொள்ளவும் பெருந்தொற்றுச் சூழலில் ஏற்படக்கூடிய வேறு மாற்றங்களுக்கு ஏற்ப மாற உதவியாகவும் நடைமுறைகளில் மாற்றம் செய்யப்படுவதாக கொவிட்-19 தொற்றுக்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழு இம்மாதம் 16ஆம் தேதி தெரிவித்திருந்தது.
அதன் பகுதியாக ஒரு வீட்டில் எந்நேரத்திலும் 5 விருந்தினர்கள் வரை கூடலாம், வேலையிடங்களில் ஐந்துபேர் வரை ஒன்றுகூடலாம் ஆகிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.


