அச்சத்தில் உக்ரேனியர்கள்

அச்சத்தில் உக்ரேனியர்கள்

2 mins read
9f26bc42-3f10-4947-a371-3e1860af90e2
தங்களது உடைமைகளைத் தூக்கிக்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்குப் புறப்படும் உக்ரேனியர்கள். (வலது படங்கள்): உக்ரேனில் உள்ள நிலவரத்தை நினைத்து கண்ணீர் மல்கும் அந்நாட்டுப் பெண்கள்.படங்கள்: நியூயார்க் டைம்ஸ், ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 3

கீவ்: கிழக்கு உக்­ரே­னில் உள்ள குடி­யி­ருப்­புப் பகு­தி­யில் ஏவு­கணை தாக்­கப்­பட்­ட­தில், சிதை­வு­க­ளுக்கு மத்­தி­யில் கிடந்த தம்­மு­டைய தந்­தை­யின் சட­லத்­துக்­குப் பக்­கத்­தில் நின்­றார் ஆட­வர் ஒரு­வர்.

"தந்­தையை நான் அங்­கி­ருந்து புறப்­ப­டச் சொன்­னேன்," என்று அவர் கண்­ணீர் மல்­கக் கூறி­னார்.

அரு­கில் இருந்த மாது ஒரு­வர், வானத்தை நோக்கி புலம்­பித் தீர்த்­தார்.

குடி­யி­ருப்­புக் கட்­ட­டங்­கள் இருந்த பகு­தியை ஏவு­கணை ஒன்று தாக்­கி­யது. தீய­ணைப்­பா­ளர்­கள் அரும்­பா­டு­பட்டு தீயை அணைத்­த­னர். அப்­ப­கு­தி­யில் இருந்த பல்­வேறு கட்­ட­டங்­கள் மோச­மாக சேத­முற்­றன. அவற்­றின் சன்­னல்­கள் சித­றிக் கிடந்­தன.

"இது நடக்­கும் என நாங்­கள் எதிர்­பார்க்­க­வில்லை. நாங்­கள் கிரா­மத்­திற்­குப் புறப்­ப­டு­கி­றோம். இந்­தப் போர் எங்­களை விட்­டு­வைக்க வேண்­டும் என நாங்­கள் பிரார்த்­திக்­கி­றோம்," என்று பதின்ம வய­துச் சிறுமி ஒரு­வர் கூறி­னார்.

உக்­ரே­னை­யும் நாட்டு மக்­க­ளை­யும் பாது­காக்க தனது படை­கள் ஆன அனைத்­தை­யும் செய்­யும் என்று அந்­நாட்டு அர­சாங்­கம் உறு­தி­பூண்­டுள்­ளது.

இதற்­கி­டையே, ரஷ்­யப் படை­கள் உக்­ரே­னுக்­குள் படை­யெ­டுத்­த­தைத் தொடர்ந்து, தலை­ந­கர் கீவில் அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­க­ளைப் பெற்­றுக்­கொள்ள மக்­கள் நீண்ட வரி­சை­களில் காத்­தி­ருந்­த­னர்.

பாது­காப்­பான பகு­தி­க­ளுக்கு ஒரே நேரத்­தில் ஏரா­ள­மா­னோர் புறப்­பட்­ட­தால், பிர­தான சாலை­களில் கடும் போக்­கு­வ­ரத்து நெரி­சல் ஏற்­பட்­டது.

உக்ரேனியர்களை அனுமதிக்கும்

மத்திய ஐரோப்பிய நாடுகள்

இதற்­கி­டையே, ரஷ்­யா­வின் படை­யெ­டுப்­பால் உக்­ரே­னை­விட்டு வெளி­யே­று­வோரைத் தங்­கள் நாடு­க­ளுக்­குள் அனு­மதிக்க மத்­திய ஐரோப்­பிய நாடு­கள் தயா­ராகி வரு­கின்­றன.

அண்டை நாடு­க­ளான போலந்­தும் ஹங்­கே­ரி­யும் அந்த நாடு­களில் அடங்­கும். ரஷ்­யா­வுக்கு எதி­ராக ஆகக் கடு­மை­யான தடை­களை விதிக்க போலந்து உறு­தி­பூண்­டுள்ளது. உக்­ரேன் மீது ரஷ்யா நடத்­திய தாக்­கு­தல் "கண்­மூ­டித்­த­ன­மா­னது" என்று செக் குடி­யரசு சாடி­யது.

போர்த் தடுப்பு, பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளைத் தான் எடுக்­கப்­போ­வ­தாக நேட்டோ அமைப்பு நேற்று கூறி­யது. அவற்­றில், 100க்கும் மேற்­பட்ட போர் விமா­னங்­க­ளைத் தயார்­நி­லை­யில் வைப்­ப­தும் கிழக்கு உக்­ரே­னில் துருப்­பு­க­ளின் எண்­ணிக்­கையை அதி­க­ரிப்­ப­தும் அடங்­கும்.

"எங்­க­ளது கண்­டத்­தில் நிம்­மதி குலைந்துவிட்­டது. வர­லாற்­றைத் திருத்தி எழுத ரஷ்யா அதன் படை­களைப் பயன்­படுத்­து­கிறது. உக்­ரேன் சுதந்­தி­ரப் பாதையை அமைத்­துக்­கொள்­வதை அந்­நாடு எதிர்க்­கிறது," என்­றார் நேட்டோ பொதுச் செய­லா­ளர் ஜென் ஸ்டோல்­டர்ன்­பர்க்.