சிறுவர்களுக்கான துப்பாக்கிகளைத் தயாரிக்கும் நிறுவனம்

சிறுவர்களுக்கான துப்பாக்கிகளைத் தயாரிக்கும் நிறுவனம்

1 mins read
300386f7-6b54-4300-bf58-dad2c0c9ad92
-

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த துப்பாக்கி உற்பத்தி நிறுவனம் ஒன்று, சிறுவர்களுக்கான பகுதி தானியக்க துப்பாக்கி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

"ஜேஆர்-15 என்று அழைக்கப்படும் இந்தத் துப்பாக்கியை 'வீ1 டாக்டிகள்' எனும் நிறுவனம் சந்தைப்படுத்தி வருகிறது. துப்பாக்கிச் சுடும் விளையாட்டில் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பான முறையில் பெற்றோர் அறிமுகம் செய்ய இது உதவும் என அந்நிறுவனம் கூறுகிறது," என்று என்டிடிவி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

அந்தத் துப்பாக்கி "தந்தை, தாயார் வைத்திருக்கும் துப்பாக்கியைப் போலவே காட்சியளிப்பதாகவும் செயல்படுவதாகவும்" அந்நிறுவனத்தின் இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கான இந்தத் துப்பாக்கியின் அறிமுகம் குறித்து பாதுகாப்புக் குழுக்களிடையே கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் துப்பாக்கி வன்முறைச் சம்பவங்களில் கிட்டத்தட்ட 45,000 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 1,500க்கும் அதிகமானோர் சிறு வயதினர்.