ரஷ்யாவுக்கு எதிராக தடைகள் விதிக்க அழைப்பு

ரஷ்யாவுக்கு எதிராக தடைகள் விதிக்க அழைப்பு

2 mins read
daa735fb-1740-4c8e-88c2-8319e1d6902e
-

சிங்­கப்­பூர்: உக்­ரே­னுக்கு மனி­தா­பி­மான ஆத­ரவு தேவை என்­ற­போ­தி­லும் அதற்கு எதி­ரா­கத் தாக்­கு­தல்­களை நடத்­தும் ரஷ்யா மீது கடு­மை­யான நட­வ­டிக்­கையை உலக நாடு­கள் எடுக்க வேண்­டும் என்று சிங்­கப்­பூ­ருக்­கான உக்­ரே­னி­யத் தூதர் கத்­த­ரினா ஸெலென்கோ (படம்) நேற்று தெரி­வித்­தார்.

மிக­வும் வலி­மை­மிக்க எதி­ரி­யான ரஷ்­யா­வுக்கு எதி­ரா­கத் தன்­னைத் தற்­காத்­துக்­கொள்ள உக்­ரே­னுக்கு கூடு­தல் ஆத­ரவு தேவைப்­ப­டு­வ­தாக அவர் கூறி­னார்.

"ரஷ்­யா­வுக்கு எதி­ராக அனைத்­து­ல­கச் சமூகம் உட­ன­டி­யாக பெரிய அளவில் ஒருங்கிணைந்து தடை­களை விதிக்க வேண்­டும். அனைத்­து­லக அள­வில் ரஷ்­யாவை அனைத்து நாடு­களும் ஒதுக்கி அதைத் தனி­மைப்­ப­டுத்த வேண்­டும்.

"உக்­ரே­னுக்­குத் தேவை­யான ஆயு­தங்­கள், பாது­காப்பு சாத­னங்­கள், எரி­பொ­ருள் போன்­ற­வற்றை வழங்க வேண்­டும்," என்று உலக நாடு­க­ளுக்கு திரு­வாட்டி ஸெலென்கோ அழைப்பு விடுத்­தார்.

உக்­ரே­னுக்கு ராணுவ ஆத­ரவு தேவைப்­ப­டு­வ­தாக திரு­வாட்டி ஸெலென்கோ கூறி­னார். நாட்­டைத் தற்­காக்க ஆயி­ரக்­க­ணக்­கான உக்­ரே­னி­யர்­கள் தற்­காப்­புப் படை­களில் இணைந்­தி­ருப்­பதை அவர் சுட்­டி­னார்.

ரஷ்­யா­வுக்­கும் உக்­ரே­னுக்­கும் இடை­யி­லான இந்த மோதல் எவ்­வாறு முடி­யும் என்று யாருக்­கும் தெரி­யாது என்று கூறிய திரு­வாட்டி ஸெலென்கோ, உக்­ரே­னுக்கு எதி­ராக ரஷ்யா முழு அள­வி­லான போரைத் தொடுத்­துள்­ள­தா­கத் தெரி­வித்­தார். போரின் கார­ண­மாக உக்­ரே­னுக்குப் பேரி­ழப்பு ஏற்­படும் என்­றார் அவர்.

ரஷ்­யா­வின் நட­வ­டிக்­கை­க­ளுக்­குப் பல நாடு­கள் கண்­ட­னம் தெரி­வித்து வங்­கி­கள், ராணு­வம் தொடர்­பான ஏற்­று­ம­தி­கள் ஆகி­ய­வற்­று­டன் ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டி­னுக்கு மிக­வும் நெருக்­க­மா­ன­வர்­க­ளை­யும் குறி­வைத்து தடை­களை விதித்­துள்­ளன.

ஆனால் ஒரு வங்­கி­யி­லி­ருந்து இன்­னொரு வங்­கிக்­குப் பணம் அனுப்பி கட்­ட­ணம் செலுத்­தும் முறை தொடர்­பில் ரஷ்­யா­வுக்­குத் தடை விதிக்­கப்­ப­ட­வில்லை.

அவ்­வாறு செய்­தால் ரஷ்ய நிறு­

வ­னங்­க­ளுக்கு வழங்­கிய கடனை ஐரோப்­பிய அமைப்­பு­க­ளால் திரும்ப பெற முடி­யாது.

அது­மட்­டு­மல்­லாது, மாற்று கட்­ட­ணம் செலுத்­தும் ­மு­றை­யை­யும் ரஷ்யா உரு­வாக்­கி­யுள்­ளது.

கூடு­தல் தடை­களை விதித்த ஆஸ்­தி­ரே­லியா

இதற்­கி­டையே, ரஷ்­யா­வுக்கு எதி­ராக ஆஸ்­தி­ரே­லியா கூடு­தல் தடை­களை விதித்­துள்­ளது. ரஷ்­யா­வில் உயர்­மட்ட சமூ­கத்­தி­ன­ரை­யும் நாடா­ளு­மன்­ற உறுப்பினர் களையும் குறி­வைத்து தடை­கள் விதிக்­கப்­பட்­டன.

"நட்பு நாடு­க­ளு­டன் இணைந்து ரஷ்­யா­வுக்கு எதி­ராக மேலும் பல தடை­களை ஆஸ்­தி­ரே­லியா விதிக்­கும். உக்­ரேன் மீது போர் தொடுத்­துள்ள ரஷ்­யா­வுக்­குத் தொடர்ந்து நெருக்­கு­தல் அளிக்­கப்­படும்," என்று ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் தெரி­வித்­தார்.

ரஷ்­யா­வுக்கு உத­வும் பெல­

ரு­ஸைச் சேர்ந்த முக்­கி­ய­மான தனி­

ந­பர்­கள் மற்­றும் அமைப்­பு­க­ளுக்கு எதி­ரா­க­வும் தடை­கள் விதிக்க அமெ­ரிக்­கா­வு­டன் இணைந்து செயல்­பட்டு வரு­வ­தாக ஆஸ்­தி­ரே­லியா கூறி­யது. உக்­ரே­னுக்­குத் தேவை­யான மருத்­து­வச் சாத­னங்­களை ஆஸ்­தி­ரே­லியா அனுப்ப இருக்­கிறது. வர்த்தகத் தடை களையும் மீறி ரஷ்யாவிடமிருந்து கோதுமையை இறக்குமதி செய்யும் சீனாவை திரு மோரிசன் சாடினார். சீனா செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றார் அவர்.