ஜோகூர் தேர்தல்: பன்முனைப் போட்டி எதிர்பார்க்கப்படுகிறது

ஜோகூர் தேர்தல்: பன்முனைப் போட்டி எதிர்பார்க்கப்படுகிறது

3 mins read
efbfc85a-5ddf-4ea3-ace7-fe936106573c
ஜோகூரைச் சேர்ந்த குடும்பத்திடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மலேசிய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் (வலது). படம்: மலேசிய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி -

ஜோகூர் பாரு: ஜோகூர் தேர்­த­லில் மலே­சி­யா­வின் பிர­தான, புதிய கட்­சி­க­ளைச் சேர்ந்த வேட்­பா­ளர்­கள் கள­மி­றங்க இருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தத் தேர்­

த­லில் ஒவ்­வொரு தொகு­தி­யி­லும் ஐந்து வேட்­பா­ளர்­கள் வரை போட்டியிட்டு பன்­மு­னைப் போட்டி ஏற்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இன்று வேட்­பு­மனு தாக்­கல் தினம். வாக்­கா­ளர்­களை ஈர்க்­கும் நோக்­கு­டன் கூடு­தல் இளம் நிபு­ணர்­களை வேட்­பா­ளர்­க­ளாக

கட்­சி­கள் முன்­னி­றுத்­தும் என்று நம்­பப்­ப­டு­கிறது.

ஆட்­சிக்கு வந்­தால் ஜோகூர் மாநி­லத்­த­வர்­க­ளுக்­குத் தங்­க­ளால் பல நல்ல வாய்ப்­பு­களை உரு­வாக்கி வழங்க முடி­யும் என்று அனைத்து கட்­சி­களும் கூறி வரு­கின்­றன.

அடுத்த மாதம் 12ஆம் தேதி நடை­பெ­றும் தேர்­த­லில் வாக்­

கா­ளர் குறைந்­த­பட்ச வயது முதல்­மு­றை­யாக 21லிருந்து 18க்குக் குறைக்­கப்­பட்­டுள்­ளது.

வாக்­க­ளிக்க தகுதி பெறும் அனைத்து ஜோகூர் மாநி­லத்­த­வர்­க­ளின் பெயர்­களும் ஏற்­கெ­னவே பதி­வேட்­டில் இருக்­கும் என்­றும் அவர்­கள் புதி­தா­கப் பதிவு செய்­யத் தேவை­யில்லை என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

இளை­யர்­களை மைய­மா­கக் கொண்­டுள்ள மலே­சிய ஐக்­கிய ஜன­நா­ய­கக் கூட்­டணி முதன்­மு­த­லா­கத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­கிறது. இக்­கட்­சி­யின் தலை­வ­ரான 29 வயது திரு சையது சாதிக் அப்­துல் ரஹ்­மான், கிட்­டத்­தட்ட மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்பு மலே­சி­யா­வின் இளை­யர், விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ரா­கப் பதவி வகித்­த­வர்.

மலே­சி­யப் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப்­பின் தலை­மை­யின்­கீழ் செயல்­படும் பெரிக்­காத்­தான் நேஷ­னல் கூட்­ட­ணி­யைச் சேர்ந்த வேட்­பா­ளர்­களில் மூன்­றில் ஒரு பங்­கி­னர் 40 வய­துக்­கும் குறை­வா­ன­வர்­கள்.

முன்­னாள் மலே­சி­யப் பிர­த­மர் டாக்­டர் மகா­தீர் முகம்­ம­தின் பெஜு­வான் தானா ஆயர் கட்­சி­யைச் சேர்ந்த வேட்­பா­ளர்­களில் ஏறத்­தாழ 60 விழுக்­காட்­டி­னர் 50 வய­துக்­கும் குறை­வா­னர்­கள்.

தனது வேட்­பா­ளர்­களில் 80 விழுக்­காட்­டி­ன­ருக்­கும் அதி­க­மா­னோர் 55 வய­துக்­கும் குறைந்­த­வர்­கள் என்­றும் அவர்­கள் அனை­

வ­ரும் பட்­ட­தா­ரி­கள் என்­றும் அம்னோ தலை­மை­யின்­கீழ் செயல்­படும் தேசி­ய முன்னணிக்

கூட்­டணி தெரி­வித்­துள்­ளது.

"நாங்­கள் முன்­னி­றுத்­தும் இளை­யர்­கள் ஜோகூர் மக்­க­ளுக்­குத் துடிப்­பு­டன் சேவை­யாற்­று­வர் என நம்­பு­கி­றோம்," என்று தமது கூட்­ட­ணி­யின் வேட்­பா­ளர்­களை அறி­மு­கப்­ப­டுத்தி வைத்­த­போது கூறி­னார் தேசிய முன்னணிக் கூட்­ட­ணி­யின் தலை­வர் திரு ஸாஹிட் ஹமிடி.

ஏறத்­தாழ 2.6 மில்­லி­யன் ஜோகூர் மாநி­லத்­த­வர்­கள் வாக்­க­ளிக்க இருப்­ப­தாக திரு சையது சாதிக் தெரி­வித்­தார். அவர்­களில் நான்­கில் ஒரு பங்­கி­னர் முதல்­முறை வாக்­க­ளிக்­கும் இளை­யர்­கள் என்­றார் அவர்.

திரு சையது சாதிக்­கின் மலே­சிய ஐக்­கிய ஜன­நா­யக் கூட்­ட­ணி­யின் அனைத்து வேட்­பா­ளர்­களும் 40 வய­துக்­கும் குறை­வா­ன­வர்­கள்.

"40 வய­துக்­கும் குறை­வான ஜோகூர் மாநி­லத்­த­வர்­கள் தங்­க­ளுக்குக் கூடு­தல் வேலை ­வாய்ப்பு­ களும் வர்த்­தக வாய்ப்­பு­களும் வழங்­கப்­பட வேண்­டும் என விரும்பு­கின்­ற­னர்," என்று ஜன­நா­ய­கச் செயல் கட்­சி­யின் ஜோகூர் மாநி­லத் தலை­வர் லியூ சின் டோங் தெரி­வித்­தார். பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணி­யின் வேட்­பா­ள­ரான திரு லியூ பெர்­லிங் தொகுதி ­யில் போட்­டி­யிட இருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

மலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தலின் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை ஜோகூர் மாநிலத் தேர்தல் ஒரளவுக்குக் காட்டிவிடும் என்று நம்பப்படுகிறது. 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் ஜோகூரைக் கைப்பற்றியது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சில சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவியதை அடுத்து, அம்மாநிலம் மீண்டும் அம்னோ வசம் சென்றது.