தோக்கியோ: ஜப்பானின் குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஜப்பானின் குழந்தை பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு 3.4 விழுக்காடு குறைந்ததாக ஜப்பானிய சுகாதார அமைச்சு கூறியது.
"கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக சுகாதாரப் பராமரிப்பு குறித்தும் எதிர்காலம் குறித்தும் பலருக்குப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பலர் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு இது காரணமாக இருக்கக்கூடும்," என்று அமைச்சு தெரிவித்தது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் பிப்ரவரி மாதத்திலும் ஜப்பானின் குழந்தை பிறப்பு விகிதம் படுவீழ்ச்சி கண்டது.

