ஐக்கிய அரபு சிற்றரசுகள், அதன் கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது.
திறந்த வெளிகளில் கட்டாயமாக முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று அது அறிவித்துள்ளது. இருப்பினும், கட்டடங்களுக்குள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அந்நாடு கூறியுள்ளது.
அதோடு, பொருளியல், சுற்றுலாத் துறை இடங்களில் பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளையும் அது அகற்றியுள்ளது.
புதிய விதிமுறைகள் நேற்று நடப்புக்கு வந்தன.
கொவிட்-19 நோயாளிகளின் நெருங்கிய தொடர்புகள் இனி தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. மாறாக அவர்கள் ஐந்து நாள் இடைவெளி விட்டு இரண்டு பிசிஆர் பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும்.