ரஷ்­யா­வைக் கண்­டித்து உலக நாடு­களில் தொட­ரும் பேர­ணி­கள்

ரஷ்­யா­வைக் கண்­டித்து உலக நாடு­களில் தொட­ரும் பேர­ணி­கள்

1 mins read
f184bb8c-c78d-40db-9fd1-37cf2616f54f
தோக்கியோவின் மைய வர்த்தகப் பகுதியில் நேற்று ரஷ்யாவுக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் உக்ரேனிய சிறுமியும் கலந்துகொண்டார். தங்கள் தாய்நாட்டுக்கு உலகம் உதவ வேண்டும் என்று கோரி உக்ரேனியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜப்பானியர்களும் அதில் இணைந்துகொண்டனர். படம்: ராய்ட்டர்ஸ் -

உக்­ரேன் மீது ரஷ்யா தொடுத்து வரும் தாக்­கு­தலை எதிர்த்து தோக்­கியோ, சிட்னி, தைப்பே, ரோம், பியூனஸ் ஐரஸ், லிமா, ஜெனீவா உள்­ளிட்ட பல்­வேறு நக­ரங்­களில் பல்­லா­யி­ரம் பேர் நேற்­றும் பேர­ணி­கள் நடத்­தி­னர்.

நீல­மும் மஞ்­ச­ளும் கொண்ட உக்­ரே­னின் தேசிய கொடியை ஏந்­திக்­கொண்­டும் சிட்­னி­யில் உக்­ரேன் மேலோங்­கும் என்று குரல் எழுப்­பிக்­கொண்­டும் பல­நூறு பேர் கொட்­டும் மழை­யில் சாலை­களில் ஊர்­வ­ல­மா­கச் சென்­ற­னர்.

தோக்­கி­யோ­வில் நடை­பெற்ற பேர­ணி­களில் ஐக்­கிய நாட்டு அமைப்பு பாது­காப்பு மன்­றத்­தி­லி­ருந்து ரஷ்யா நீக்­கப்­பட வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னர்.

ரஷ்­யத் தாக்­கு­தலை எதிர்த்து அண்­மைய நாள்­களில் லண்­டன் முதல் நியூ­யார்க் வரை பல நக­ரங்­களில் உலக மக்­கள் பேர­ணி­கள் நடத்தி வரு­கின்­ற­னர்.

பல இடங்­களில் ரஷ்ய அதி­பர் புட்­டினை ஹிட்­ல­ரு­டன் ஒப்­பிட்டு மக்­கள் பதா­கை­க­ளைத் தாங்­கி­னர்.

தங்­கள் நாட்டு அர­சாங்­கங்­கள் ரஷ்­யா­வுக்கு எதி­ராக இன்­னும் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் குரல் எழுப்­பி­னர்.

சிட்­னி­யைத் தவிர கேன்­ப­ரா வி­லும் ரஷ்ய தூத­ரகத்­துக்கு வெளியே சிலர் கூடி ரஷ்­யா­வுக்கு எதி­ராக கூச்­ச­லிட்­ட­னர்.