உக்­ரே­னி­லி­ருந்து பிற­நா­டு­க­ளுக்கு வெளி­யே­றும் மக்­கள்

உக்­ரே­னி­லி­ருந்து பிற­நா­டு­க­ளுக்கு வெளி­யே­றும் மக்­கள்

1 mins read
a93fe5b1-2237-4c96-93a7-a436ef07a8c7
உக்ரேனுக்கும் ஸ்லோவாக்கியாவுக்கும் இடையிலான எல்லையில் கையில் குழந்தையுடன் காத்திருக்கும் தாய். உக்ரேனிய அகதிகளை ஏற்றுவரும் நாடுகளில் ஸ்லோவாக்கியாவும் ஒன்று. படம்: ஈபிஏ -

கியவ்: உக்­ரேனை ரஷ்­யப் படை­கள் தாக்­கத் தொடங்­கி­ய­தி­லி­ருந்து, 100,000 உக்­ரே­னி­யர்­கள் போலந்­துக்­குள் தஞ்­சம் புகுந்­துள்­ள­தாக அந்­நாட்டு உள்­துறை துணை அமைச்­சர் கூறி­யுள்­ளார்.

முன்னதாக 48 மணி நேரத்­தில் 50 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட உக்­ரே­னிய மக்­கள் நாட்டை விட்டு வெளி­யேறி உள்­ள­தாக ஐக்­கிய நாட்டு அக­தி­கள் அமைப்பு மதிப்­பிட்­டுள்­ளது.

பல நூறா­யி­ரம் பேர் பக்­கத்து நாடு­க­ளுக்­குச் செல்­வ­தற்­காக எல்­லை­களை நோக்கி நகர்ந்­து­கொண்­டி­ருப்­ப­தா­க­வும் ஐக்­கிய நாடுகள் அமைப்பு கூறி­யது.

உக்­ரேன் ஆண்­கள் நாட்­டை­விட்டு வெளி­யா­வ­தைத் தடை செய்­துள்­ள­தால் பெண்­களும் சிறு­வர்­களும் மட்­டுமே வெளி­யேறி வரு­கின்­ற­னர். அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளி­டம் கண்­ணீர் சிந்தி பிரி­யா­விடை கொடுக்­கும் காட்­சி­கள் உக்­ரேன் எங்­கும் நிகழ்ந்து வரு­கின்­றன.

ரயில் டிக்­கெட்­டு­களை வாங்­க­வும் தானி­யங்கி வங்கி இயந்­தி­ரத்­தி­லி­ருந்து இருக்­கும் பணத்தை எடுத்­துக்­கொள்­ள­வும் உக்­ரே­னில் மக்கள் நீண்ட வரி­சை­களில் நிற்­கின்­ற­னர்.

ஏற்­கெ­னவே, உக்­ரே­னில் சுமார் 100,000 பேர் தங்­கள் வீடு­களை இழந்துள்ளதாக அது வியா­ழன் அன்று கூறி­யி­ருந்­தது.

ஐந்து மில்­லி­யன் பேர் வரை அக­தி­க­ளாக செல்­லக்­கூ­டும் என்­றும் அது கூறி­யி­ருந்­தது. போலந்து, மொல்­டோவோ, ஆகிய நாடு­க­ளுக்­குப் பெரும்­பா­லா­ன­வர்­கள் தப்­பித்­துச் சென்­றுள்­ள­னர்.