ஜோகூர்: ஜோகூர் மாநிலத் தேர்தலில் 56 தொகுதிகளிலும் பன்முனைப் போட்டி இடம்பெறவுள்ளது. சில இடங்களில் ஏழு வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். நேற்று காலை 10 மணிக்கு முடிவடைந்த வேட்புமனுத் தாக்கலில் 239 வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அண்மைய ஆண்டுகளில் வேறு எந்த மாநிலத் தேர்தலிலும் இந்த அளவுக்குப் போட்டி இருந்ததில்லை.
முப்பத்தைந்து தொகுதிகளிலும் நான்கு முனைப் போட்டியும் எட்டு தொகுதிகளில் ஐந்து முனைப் போட்டியும் இடம்பெறுகிறது என்று மலேசிய தேர்தல் ஆணையம் கூறியது.
நான்கு தொகுதிகளில் ஆறு வேட்பாளர்களும் இரண்டு தொகுதிகளில் ஏழு வேட்பாளர்களும் களம் இறங்கியுள்ளனர்.
இளம் வாக்காளர்களைக் கவரும் வண்ணம், இருபதுகளில் மதிக்கதக்க வயதுள்ள பல வேட்பாளர்கள் இந்த முறை தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஜோகூர் வாக்காளர்களில் ஏறத்தாழ பாதிப் பேர், அதாவது சுமார் 2.6 மில்லியன் பேர், 40 வயதுக்குக் குறைந்தவர்கள்.
மலேசியப் பொதுத் தேர்தல் இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் இடம்பெறவுள்ள நிலையில் அந்நாட்டு அரசியல் களம் சிதறி பல கட்சிகள் உருவெடுத்திருப்பதை இது காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

