ஜகர்த்தா: இந்தோனீசியாவுக்கு வருகையளிக்கும் சுற்றுப்பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள அவசியம் இருக்காது.
இந்த ஏற்பாடு ஏப்ரல் மாதத்துக்கு முன்பே நடைமுறைக்கு வரக்கூடும்.
ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து இந்தோனீசியாவுக்கு வரும் பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையிருக்காது என அந்நாட்டு அரசாங்கம் முன்னதாக தெரிவித்திருந்தது.
ஆனால், அங்கு கொவிட்-19 கிருமித் தொற்றுச் சம்பவங்கள் இறங்குமுகத்தில் இருப்பதால் விதிமுறைகளை முன்கூட்டியே தளர்த்துவது குறித்து இந்தோனீசியா பரிசிலீத்துவருகிறது.
தொற்றுச் சம்பவங்கள் தொடர்ந்து குறைந்தால், மார்ச் மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் எனக் கூறப்பட்டது.
தற்போது இந்தோனீசியாவுக்குச் செல்லும் சுற்றுப்பயணிகள் தங்களை ஐந்து நாள்கள் தனிமைப் படுத்திக்கொள்ளவேண்டும்.
மார்ச் 1ஆம் தேதியிலிருந்து இது மூன்று நாள்களுக்குக் குறைக்கப்படும் என்று இந்தோனீசிய அர சாங்கம் கூறியுள்ளது.

