சோல்: தென்கொரியாவில் கிருமித்தொற்று காரணமாக நேற்று ஒரே நாளில் இதுவரையில்லாத அளவுக்கு 112 பேர் மாண்டுபோயினர்.
ஓமிக்ரான் பரவலால் மோசமான கிருமிப் பரவல் சூழலைச் சமாளித்து வரும் நிலையில், கவலைக்கிடமான நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை சென்ற வாரத்தைவிட (408) , இந்த வாரம் (643) பெருமளவு அதிகரித்துள்ளது.
கடந்த சில நாள்களாக நாளொன்றுக்கு அங்கு ஏறத்தாழ 166,00 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின்றன. சென்ற வாரம் புதன்கிழமையன்று ஆக அதிகமாக 171,452 பேர் தொற்றுக்கு ஆளாகினர்.
அங்கு சென்ற இரண்டு வாரங்களில் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 200 விழுக்காடு அதிகரித்துள்ளது.
50 மில்லியன் மக்கள்தொகை கொண்ட தென்கொரியாவில், அண்மைய நாள்களில் அமெரிக்காவைவிட அதிகமான தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின்றன.
அமெரிக்காவில் நேற்று முன்தினம் 25,210 தொற்றுச் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.

