ஹாங்காங்கில் இருந்து வெளியேறும் சிங்கப்பூரர்கள்

ஹாங்காங்கில் இருந்து வெளியேறும் சிங்கப்பூரர்கள்

1 mins read
26ea2e63-1c00-4daa-abb9-7088bf57c87e
-

ஹாங்காங்: ஹாங்காங்கில் கடுமையாகி வரும் கட்டுப்பாடுகளால், நிரந்தரவாசிகள் உள்ளிட்ட சிங்கப்பூரர்கள் அங்கிருந்து வெளியேற விரும்புகின்றனர்.

ஹாங்காங்கில் தனது வேலையைவிட்டுவிட்ட 32 வயது சாலி எனும் பெண், மீண்டும் சிங்கப்பூர் திரும்புவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

"கட்டுப்பாடுகளால் தனது நண்பர்கள், பெற்றோரைக் காணமுடியவில்லை," என்றார் அவர்.

கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து கடுமையாக்கி வரும் ஹாங்காங், உடற்பயிற்சியில் ஈடுபடும் போதுகூட கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் எனச் சென்ற 24ஆம் தேதி அறிவித்தது ஹாங்காங். இரண்டு பேருக்கு மேல் ஒன்றுகூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.