ஹெனான்: சீனா 24 செயற்கைக் கோள்களை விண்வெளியில் நிலை நிறுத்துவதற்காக, அவற்றைத் தாங்கிச் செல்லும் லாங்மார்ச்-8 உந்துகணையை நேற்று அனுப்பியுள்ளது.
சீனாவில் இதுவரையில்லாத அளவுக்கு ஒரே உந்துகணையில் அதிக செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. கடல் சூழல் கண்காணிப்பு, காட்டுத் தீ தடுப்புஆகியவற்றிற்கு இவை உதவும்.

