ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் லிஸ்மோர் நகரத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரையில்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீட்டின் இரண்டாவது மாடி வரை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக லிஸ்மோர் நகரவாசி ஒருவர் கூறினர். வெள்ளத்தில் இருந்து தப்பிக்க அவர்கள், வீட்டுக்கூரையின்மீது ஏற வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. பல ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். மழை, வெள்ளத்திற்கு எட்டுப் பேர் மாண்டுவிட்டனர். இந்நிலையில், கடும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
படம்: இபிஏ

