பிணவறைகளில் இடமில்லாமல் திணறும் ஹாங்காங்

பிணவறைகளில் இடமில்லாமல் திணறும் ஹாங்காங்

1 mins read
25fed656-4350-4c7f-8715-2a334d9c0bcd
-

ஹாங்­காங்: கிரு­மிப் பர­வல் காலத்தில் ஹாங்­காங் இது­வரை காணாத நெருக்­க­டி­யைச் சந்­தித்து வரு­கிறது.

தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­கரிப்­பது மட்­டு­மல்­லா­மல், அதன் கார­ண­மாக ‌ஏற்­படும் உயி­ரி­ழப்­பு­களுக்கும் நேற்று ஆக அதி­க­மாக பதி­வா­கின.

ஹாங்­காங்­கில் உள்ள மருத்து­வ

­ம­னை­கள், பொதுப் பிண­வ­றை­களில் சட­லங்­களை வைப்­ப­தற்­கான இடம் இல்லை என்று மருத்து­வ­மனை அதிகாரிகள் நேற்று கூறினர்.

பிண­வ­றை­களில் இடம் இல்­லாத கார­ணத்­தால், மருத்­துவ மனைகளின் விபத்து, அவ­சர அறை­க­ளி­லேயே பல சட­லங்­கள் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக ஹாங்­காங் பொது மருத்­து­வர்­கள் சங்­கத் தலை­வர் டாக்­டர் டோனி லிங் கூறி­னார்.

ஊழி­யர் பற்­றாக்­குறை கார­ண­மாக இச்­ச­ட­லங்­களை உரி­ய­வர்­களி­டம் ஒப்­ப­டைப்­ப­தில் தாம­தம் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார்.

கடுங்­கு­ளிர் நில­வும் நிலை­யில், கிரு­மித்­தொற்று கார­ண­மாக உயி­ரி­ழக்­கும் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை கடந்த இரண்டு வாரங்­களில் பெரு­ம­ளவு அதி­க­ரித்து விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சென்ற வாரத்­தில் கிட்­டத்­தட்ட 300 பேர் உயி­ரி­ழந்­த­னர். ஞாயிறன்று அங்கு ஆக அதி­க­மாக ஒரே நாளில் 83 பேர் மாண்­டு­விட்­ட

­னர்.

இதற்­கி­டையே, ஹாங்­காங் முழு­வ­தும் நடத்­தப்­ப­ட­வுள்ள கிரு­மித்­தொற்று பரி­சோ­த­னை­யின்­போது அந்­ந­க­ரம் முற்­றி­லும் முடக்­கப்­ப­டக்­கூ­டும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.