பிலிப்பீன்சில் புதிய இயல்பு நிலை

பிலிப்பீன்சில் புதிய இயல்பு நிலை

1 mins read
31cdbca6-8e92-4358-8109-7e43285b3f06
-

மணிலா: பிலிப்பீன்ஸ் இன்று முதல் புதிய இயல்பு நிலைக்கு மாறுகிறது. இதன்படி, கட்டாய முகக்கவசம் தவிர, அனைத்துக் கட்டுப்பாடுகளும் அங்கு தளர்த்தப்பட்டுவிட்டன.

மெட்ரோ மணிலாவில் கிருமிப் பரவல் எச்சரிக்கை நிலை ஆகக் குறைந்த நிலையான 1ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க பணிக்குழு சொன்னது. இதன்படி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப்போல், இனி தொற்றுச் சம்பவங்கள் சுகாதார அவசர நிலையாக கருதப்படாது.அதே சமயம் கிருமித்தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாகவும் கருதப்படாது.

கட்டாய முகக்கவசம், தடுப்பூசி சான்றிதழ், பரிசோதனை, தனிமைப்படுத்தல் ஆகியவை தொடர்ந்து நடப்பில் இருக்கும்.

ஆனால், உணவகங்கள், திரையரங்குகள் போன்ற பொது இடங்களில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கைக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.