பிள்ளைகளைப் பிணைக் கைதிகளாக்கிய மியன்மார்

பிள்ளைகளைப் பிணைக் கைதிகளாக்கிய மியன்மார்

1 mins read
2450202d-b616-45fd-84c7-74482a82a593
-

யங்­கூன்: மியன்­மார் படை­யி­னர் 85 பிள்­ளை­கள் உட்­பட மேலும் சிலரை இரண்டு நாள்­க­ளுக்­குப் பிணை­க் கை­தி­க­ளாக பிடித்து வைத்­தி­ருந்­த­தாக போராளிக் குழு­வும் ராணுவ ஆட்சிக்குழுவுக்கு எதிராக மறைமுக அர­சாங்­க­மும் கூறின.

அவர்களில் ஐந்து வயதுப் பிள்­ளை­களும் இருந்ததாக அவை கூறின. இது அனைத்­து­ல­கச் சட்ட மீறல் என்று அவை சாடின.

சண்டை காரணமாக, அப்­ப­குதி மக்­கள் பலர் வெளி­யேறி­விட்­ட­னர். ஆனால், 10 ஆசி­ரி­யர்­களும் 85 பிள்­ளை­களும் மட­லா­யம் ஒன்­றில் சிக்­கிக் கொண்­ட­னதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

மியன்­மா­ரின் சாகா­யிங் வட்­டா­ரத்­தில் நடந்த போரா­ளி­க­ளு­ட­னான மோத­லின்­போது பிடிக்­கப்­பட்ட அவர்­கள், நேற்று விடு­விக்­கப்­பட்­ட­னர். பெரியவர்கள் சிலர் விடுவிக்கப்படவில்லை.