ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத மழை, வெள்ளம்

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத மழை, வெள்ளம்

1 mins read
ca1191e7-ebf8-41c9-b450-4cf1fd290bad
சிட்னியில் இன்று 150மில்லிமீட்டர் அளவு வரை மழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டிருக்கிறது. (படம்: ராய்ட்டர்ஸ்) -
multi-img1 of 3

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் அடுத்த இரண்டு நாள்கள் கனத்த மழையும் திடீர் வெள்ளமும் தாக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வரலாறு காணாத மிக மோசமான மழைக்கும் வெள்ளத்துக்கும் மக்கள் தயாராகவேண்டும் என நியூ சவுத் வெல்ஸ் மாநில முதல்வர் கேட்டுக்கொண்டார். வீடுகளை வீட்டு வெளியேறவும் அவர்கள் தயாராக இருக்கவேண்டுமென அவர் கூறினார்.

நியூ சவுத் வெல்ஸ், குவீன்ஸ்லாந்து ஆகிய மாநிலங்களில் சென்ற வாரம் ஏற்பட்ட வெள்ளத்தில் ஒன்பது பேர் மாண்டனர்.

பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் நூற்றுக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர்.