மலேசியா: ஐந்து மாதங்களில் ஆக அதிக கொவிட்-19 உயிரிழப்புகள்

மலேசியா: ஐந்து மாதங்களில் ஆக அதிக கொவிட்-19 உயிரிழப்புகள்

1 mins read
7e0167b3-b914-4e1a-bfc9-137836a5449e
-

கோலா­லம்­பூர்: கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் நேரும் மர­ணங்­கள் அதி­க­ரித்து வரும் நிலை­யில் உட­ன­டி­யாக 'பூஸ்­டர்' எனப்­படும் கூடு­தல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ளு­மாறு மலே­சியா அதன் மக்­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

கிரு­மித்­தொற்­றால் நேற்று முன்­தி­னம் 115 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். இவர்­களில் மருத்­து­வ­மனைக்கு இறந்த நிலை­யில் வந்­த­வர்­கள் 36 என்று கூறப்­பட்­டது.

ஐந்து மாதங்­களில் பதி­வான ஆக அதி­க­மான உயி­ரி­ழப்­பு­கள் இதுவே என்று அறி­யப்­ப­டு­கிறது. இவ்­வாண்­டுத் தர­வு­க­ளின் அடிப்­படை­யில், உயி­ரி­ழந்த பெரும்­பா­லா­னோர் கொவிட்-19க்கு எதி­ரான மூன்­றா­வது தடுப்­பூ­சி­யைப் போட்­டி­ரா­த­வர்­கள் என்று கூறப்­பட்­டது.

"கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்­த­வர்­களில் 90 விழுக்­காட்­டி­னர் பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள்," என்று மலே­சி­யா­வின் சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் நேற்று டுவிட்­ட­ரில் பதிவு செய்­தி­ருந்­தார். இதற்­கு­முன், கடந்த ஆண்டு அக்­டோ­பர் 7ஆம் தேதி­யன்று 132 கொவிட்-19 உயி­ரி­ழப்­பு­கள் பதி­வா­கின.

இதற்­கி­டையே, கடந்த மாதம் 5ஆம் தேதிக்­கும் 21ஆம் தேதிக்­கும் இடையே உயி­ரி­ழந்த நிலை­யில் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்ட 113 நோயா­ளி­களில், 9 விழுக்­காட்­டி­ன­ருக்­குத் தாங்­கள் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் என்றே தெரி­ய­வில்லை என்று திரு கைரி குறிப்­பிட்­டார்.

தங்­க­ளின் அன்­றாட வாழ்க்­கை­யில் சாதா­ரண சளிக்­காய்ச்­ச­லாக கொவிட்-19ஐக் கரு­த­வேண்­டாம் என்று திரு கைரி தொடர்ந்து பொது­மக்­க­ளுக்கு அறி­வு­றுத்தி வரு­கி­றார்.