வார்சா: ரஷ்யாவுக்காக போலந்து-உக்ரேன் எல்லைப் பகுதியில் வேவு பார்த்ததாக சந்தேகிக்கப்பட்ட ஸ்பானிய குடியுரிமை கொண்ட ரஷ்ய ஆடவரை போலந்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அந்த ஆடவர் உக்ரேனுக்குள் நுழையத் திட்டமிட்டிருந்ததாக நம்பப்படுகிறது.
கைதான அந்த ஆடவரின் பெயர் பப்லோ கொன்சாலேஸ் என அவரது ஸ்பானிய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
அவர் ஸ்பெயினைச் சேர்ந்த செய்தியாளர் என்று அவர் கூறினார்.