வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள குடியிருப்புக் கட்டடத்தில் நேற்று முன்தினம் காலை நிகழ்ந்த வெடிப்பில் குறைந்தது பத்து பேர் காயமடைந்தனர்.
வாஷிங்டனுக்கு வடக்கில் உள்ள சில்வர் ஸ்பிரிங் எனும் இடத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
தீயணைப்புப் படையினர் அங்கு சென்றடைந்தபோது கட்டடம் கொழுந்துவிட்டு எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியிருப்பாளர்கள் பலர் கட்டடத்திலிருந்து வெளியேறியனர். மற்றவர்களை தீயணைப்புப் படையினர் மீட்டனர்.
காயமடைந்தவர்களில் மூவருக்கு மிகவும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.
இன்னும் பலரைக் காணவில்லை என்றும் அவர்களைத் தேடும் பணிகள் தொடர்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.