வெளிநாட்டுப் பயணிகள் மீதான கொவிட்-19 கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தும் மலேசியா, இந்தோனீசியா

வெளிநாட்டுப் பயணிகள் மீதான கொவிட்-19 கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தும் மலேசியா, இந்தோனீசியா

1 mins read
3640e629-a001-4142-9c0a-2cae4bc88aff
படம்: இபிஏ -

இந்தோனீசியாவின் பாலித் தீவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு தனிமை உத்தரவில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து இந்தோனீசியா பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் சனிக்கிழமை (மார்ச் 5) தெரிவித்துள்ளனர்.

இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ இதுகுறித்து திங்கட்கிழமை முடிவெடுக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, தாய்லாந்து, கம்போடியாவில் இருந்து வரும் பயணிகள் மீதான கட்டுப்படுகள் தளர்ப்படுவதாக அண்டை நாடான மலேசியா அறிவித்துள்ளது.

தாய்லாந்து, கம்போடியாவில் இருந்து மலேசியா வரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் மார்ச் 15ஆம் தேதியிலிருந்து தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.