தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட மனிதர் மாண்டார்

1 mins read
5478a969-cdd3-4d94-83ce-19f5fcaad372
பன்றி இதயம் பொருத்தப்பட்ட டேவிட் பென்னட் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இரண்டே மாதங்களில் காலமானார் (படம்: ராய்ட்டர்ஸ்) -

முதன்­மு­றை­யாக, பன்­றி­யின் இத­யம் பொருத்தப்பட்ட ஆடவர் காலமானார்.

இரண்டு மாதங்களுக்கு முன் அவருக்கு மர­பணு மாற்­றம் செய்­யப்­பட்ட பன்றியின் இதயம் கொண்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்­சை­ செய்யப்பட்டது.

இது மருத்­துவ உல­கில் மாபெ­ரும் சாதனை எனக் கருதப்பட்டது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்­சைக்­கா­கக் காத்­தி­ருக்­கும் நூற்­றுக்­கணக்­கா­னோ­ரி­டம் இது பெரும் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தியது.

சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவக் குழு எதிர்காலத்தில் இதுபோன்ற அதிகமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடத்த நம்பிக்கை கொண்டிருந்தது.

உயி­ருக்கு அச்­சு­றுத்­த­லான இதய நோயால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த, அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த 57 வய­தான டேவிட் பென்­னட்டுக்கு ஜனவரி 7ஆம் தேதி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சிகிச்சைக்குப் பிறகு அவர் உடல்நலனுடன் இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆனால் கடந்த சில வாரங்களாக அவருடைய உடல்நிலை மோசமடைய தொடங்கியதாக அவருடைய மருத்துவக் குழு தெரிவித்தது.

பென்­னட்டின் இறப்புக்குக் காரணம் சரியாகத் தெரியவில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.