தரைவழி விடிஎல் பயணிகள் வரம்பு அதிகரிப்பு: மலேசியா

தரைவழி விடிஎல் பயணிகள் வரம்பு அதிகரிப்பு: மலேசியா

10 Mar 2022 - 9:30 pm

1 mins read

மலே­சி­யா­வுக்­கும் சிங்கப்பூருக்கும் இடை­யில், தரைவழி 'விடி­எல்' பய­ணி­களின் வரம்பை 60 விழுக்காட்டு வரை அதிகரிக்கவிருப்பதாக மலேசியா அறிவித்துள்ளது.

இது மார்ச் 14ஆம் தேதி நடப்புக்கு வரும்.

தற்போது உள்ள 2,160 எனும் எண்ணிக்கையை 3,420க்கு உயர்த்துவது திட்டம் என மலேசிய போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

இதற்கான பேருந்து பயணச்சீட்டுகளின் விற்பனை நாளை தொடங்கும்.

முழுமையாகத் தடுப்­பூசி போட்டுக்­கொண்­ட அதிகமானோர் இருநாடுகளுக்கிடையே பயணம் செய்ய இந்த நடவடிக்கை வழிவகுக்கும்.

வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து, வெளிநாட்டுப் பயணிகளுக்கு மலேசியா அதன் எல்லையை மீண்டும் திறக்கவுள்ளது. இந்நிலையில் தரைவழி 'விடி­எல்' பய­ணி­கள் வரம்பை அந்நாடு அதிகரித்துள்ளது.