ரஷ்யா: உக்ரேன் பொய்ச் செய்திகளைப் பரப்புகிறது

ரஷ்யா: உக்ரேன் பொய்ச் செய்திகளைப் பரப்புகிறது

2 mins read
c45cd089-a298-4433-9992-dbf849a908e0
மரியபோல் சிறார் மருத்துவமனையில் கர்ப்பிணிகள், சிறுவர்கள் என யாரும் இல்லை என்றும் அந்தக் கட்டடத்தைப் பயன்படுத்தி உக்ரேனிய ராணுவம் தனது படைகள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது. படம்: ஏஎஃப்பி -

மாஸ்கோ: உக்­ரே­னின் மரி­ய­போல் நக­ரில் உள்ள சிறார் மருத்­துவ

மனையை ரஷ்­யப் படை­கள் வெடி­வைத்து தகர்த்ததில் குழந்­தை­கள் மாண்­ட­தாக உக்­ரேன் கூறு­வது உண்­மை­யல்ல என்று ரஷ்யா திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளது.

அந்த மருத்­து­வ­ம­னை­யில் கர்ப்­பி­ணிப் பெண்­கள், குழந்­தை­கள் என யாரும் இல்லை என்று ரஷ்யா கூறி­யது. அங்கு உக்­ரே­னிய ராணுவ வீரர்­கள் மட்­டுமே இருப்­ப­தாக ஐநா­வுக்­கான ரஷ்­யா­வின் முதல் துணை நிரந்­த­ரப் பிர­தி­நிதி டிமிட்ரி பொலி­யேன்ஸ்கி டுவிட்­டர் மூலம் தெரி­வித்­தார்.

உக்­ரேன் அந்த மருத்­து­வ­

ம­னையை ராணுவ முகா­மாக

மாற்­றிய­தா­க­வும் அங்­கி­ருந்து ரஷ்ய வீரர்­களை நோக்­கித் தாக்­கு­தல் நடத்­து­வ­தா­க­வும் திரு பொலி­யேன்ஸ்கி கூறி­னார்.

"தகவல் பயங்கரவாதத்தில் உக்ரேன் ஈடுபடுகிறது," என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சு அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளது.

மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த விவரங்களை ரஷ்ய ராணுவத்திடமிருந்து கேட்டிருப்பதாக ரஷ்ய அரசாங்கம் கூறியது. இந்நிலையில், உக்­ரேன் மீது போர் தொடுத்த கார­ணத்­தால் ரஷ்யா மீது பல தடை­கள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக, ரஷ்ய வங்­கி­கள் மீது தடை­கள் விதிக்­கப்­பட்­டுள்­ளன. இத­னால் வெளி­நா­டு­களில் இருக்­கும் ரஷ்ய சுற்­றுப்­ப­ய­ணி­க­ளுக்­குப் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

தானி­யங்கி வங்கி இயந்­தி­ரங்­

க­ளி­லி­ருந்து அவர்­க­ளால் பணம் எடுக்க முடி­ய­வில்லை என்­றும் சொந்த செல­வுக்­காக பணம் இன்றி அவர்­கள் தவிப்­ப­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது. தாய்­லாந்து, இந்­தோ­னீ­சி­யா­வின் பாலித் தீவு போன்ற இடங்­களில் ரஷ்ய சுற்­றுப்­ப­ய­ணி­கள் பல­ருக்கு இந்த நிலை ஏற்­பட்­டுள்­ளது. இதற்­கி­டையே, மரி­ய­போல் நக­ரி­லி­ருந்து பொது­மக்­க­ளைப்

பத்­தி­ர­மாக வெளி­யேற்ற மீண்­டும் முயற்சி செய்­யப்­போ­வ­தாக உக்­ரேன் தெரி­வித்­துள்­ளது.

அவர்­களை அங்­கி­ருந்து வெளியேற்ற இது­வரை மேற்­கொள்­ளப்­பட்ட முயற்­சி­கள் அனைத்­தும் தோல்­வி­யில் முடிந்­த­தாக உக்­ரே­னிய துணைப் பிர­த­மர் இரினா வெரேஸ்­சுக் கூறி­னார்.

மரி­ய­போல் நக­ரில் தற்­கா­லிக சண்டை நிறுத்தம் மீறப்­பட்­ட­தற்கு ரஷ்­யப் படை­யி­ன­ரும் உக்­ரே­னி­யப் படை­யி­ன­ரும் ஒரு­வர் மீது ஒரு­வர் குற்­றம் சாட்­டு­கின்­ற­னர்.