ஜெனீவா: போர் தொடங்கியதி
லிருந்து இதுவரை கிட்டத்தட்ட 2.5 மில்லியன் உக்ரேனியர்கள் சொந்த நாட்டிலிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் இரண்டு மில்லியன் உக்ரேனியர்கள் சொந்த நாட்டிலேயே இருப்பதாகவும் ஆனால் அவர்கள் தங்கள் வீடுகளை இழந்து செய்வதறியாது தவித்து வருவதாகவும் ஐநா நேற்று கூறியது. தேவையில்லாத போரால் பெருமளவிலான மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாக ஐநாவின் அகதிகள் பிரிவின்
தலைவர் ஃபிலிப்போ கிரான்டி
அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளார்.
கடந்த மாதம் 24ஆம் தேதி போர் தொடங்கியதிலிருந்து தற்போதைய நிலவரப்படி உக்ரேனிய அகதிகளின் எண்ணிக்கை 2.5 மில்லியனாக அதிகரித்திருப்பதாக அவர் டுவிட்டரில் பதிவிட்டார்.
உக்ரேனில் இருந்த ஏறத்தாழ 116,000 வெளிநாட்டவர்களும் அந்நாட்டிலிருந்து வெளியேறியிருப்பதாக ஐநா தெரிவித்தது.
போர் தொடர்வதால் உக்ரேனிய அகதிகளின் எண்ணிக்கை கூடிய விரைவில் ஏறத்தாழ நான்கு
மில்லியனாக அதிகரிக்கும் என்று ஐநா எதிர்பார்க்கிறது.
மூன்று வாரங்களிலிலேயே
அகதிகளின் எண்ணிக்கை 2.5 மில்லியனாகப் பதிவாகியிருப்பதால் நாள்கள் செல்லச் செல்ல உயிர் பிழைக்க சொந்த நாட்டிலிருந்து வெளியேறும் உக்ரேனியர்களின் எண்ணிக்கை நான்கு மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை என்று ஐநா தெரிவித்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பியர்கள் பலர் அகதிகளாகியிருப்பது இதுவே முதல்முறை என்று ஐநா கவலை தெரிவித்தது.
உக்ரேனிய மக்களைப் பத்திரமாக வெளியேற்றுவோம்;
உறுதி அளித்த ரஷ்யா
இதற்கிடையே, கியவ், கார்கிவ் போன்ற முக்கிய உக்ரேனிய நகரங்களில் இருக்கும் மக்களை அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றுவோம் என்று ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கு உக்ரேனின் சம்மதத்திற்காக இனி காத்திருக்கப்போவதில்லை என்று அது கூறியது. உக்ரேனிலிருந்து வெளியேறி ரஷ்யாவுக்குச் செல்லும் உக்ரேனியர்
களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்று ரஷ்யாவின் தேசிய தற்காப்பு நிர்வாக மையத்தின் தலைவர் கர்னல் ஜெனரல் மிக்காயில் மிசின்ட்செவ் கூறினார்.
உக்ரேனிய மக்களை நகரங்களிலிருந்து வெளியேற விடாமல் அந்நாட்டுப் போராளிகள் தடுத்து வைத்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

