அகதிகளுக்கு வேலை தர கிழக்கு ஐரோப்பிய நாடுகள் விருப்பம்

அகதிகளுக்கு வேலை தர கிழக்கு ஐரோப்பிய நாடுகள் விருப்பம்

1 mins read
c6799837-6d31-49c7-8156-0d870bb035bf
-

சோஃபியா (பல்­கே­ரியா): ரஷ்ய படை­யெ­டுப்­புக் கார­ண­மாக மில்­லி­யன் கணக்­கா­னோர் உக்­ரே­னி­லி­ருந்து வெளி­யேறி வரு­கின்­ற­னர். கிழக்கு ஐரோப்­பிய நாடு­கள் அவர்­களை ஏற்­றுக்­கொண்டு தங்­க­ளின் ஊழி­ய­ர­ணி­யில் சேர்த்­துக்­கொள்­ளத் தயா­ராய் இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. எனி­னும், உக்­ரே­னி­லி­ருந்து வெளி­யே­றிய அனைத்து அக­தி­க­ளுக்­கும் வேலை தரு­வது சவா­லாக இருக்­கும் என்று ஐக்­கிய நாட்டு நிறு­வ­னம் எச்­ச­ரித்­துள்­ளது.

சுமார் 2.5 மில்­லி­யன் பேர் உக்­ரே­னிலிருந்து வெளி­யே­றி­விட்­ட­தாக ஐக்­கிய நாட்டு நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

இர­ண்டாம் உல­கப் போருக்­குப் பிறகு இதுவே ஐரோப்பா எதிர்­நோக்­கும் ஆகப் பெரிய அகதி­கள் தொடர்­பி­லான நெருக்­கடி என்று அது குறிப்பிட்டது.

உக்ரேனிலிருந்து வெளியேறிய பாதிக்­கும் மேலான அக­தி­கள் தற்­போது போலந்­தில் உள்­ள­னர்.

பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோர் பல்­கே­ரி­யா­வி­லும் மொல்­டோ­வா­வி­லும் இருக்­கின்­ற­னர். இவ்­விரு நாடு­களும், மக்­கள்­தொகை ஆக வேக­மா­கக் குறை­யும் உலக நாடு­களில் அடங்­கும்.