சவூதியில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சவூதியில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

1 mins read
c3824ef4-8dee-4578-aa0a-3ff90c24dbc5
சவூதி அரேபியாவில் சென்றாண்டு 69 மரணத் தண்டனைகள் மேற்கொள்ளப்பட்டன. (படம்: பிக்ஸாபே) -

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றபட்டதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவருமே பயங்கரவாதத் தொடர்பான செயல்களில் குற்றச்சாட்டப்பட்டவர்கள் என அந்நாட்டின் அதிகாரபூர்வ செய்தி நிலையம் குறிப்பிட்டது.

அல் கயீடா, ஐ.எஸ், ஏமனைச் சேர்ந்த ஊத்தி கிளர்ச்சியாளர்கள் போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் குற்றவாளிகளுக்குத் தொடர்பு இருந்ததாகக் கூறப்பட்டது.

சவூதிக்குள் ஆயுதங்கள் கடத்தியது, பாதுகாப்புப் படையினரைக் கொன்றது, முக்கிய இடங்களில் தாக்குதல்கள் மேற்கொண்டது அல்லது தாக்குதல்கள் மேற்கொள்ள திட்டமிட்டது போன்ற குற்றங்களுக்காக அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

81 குற்றவாளிகளில் 73 பேர் சவூதி குடிமக்கள், ஏழு பேர் ஏமனியர்கள், ஒருவர் சிரியாவைச் சேர்ந்தவர்.

உலகில் மரண தண்டனை அதிகமாக நிறைவேற்றபடும் நாடுகளில் சவூதி அரேபியாவும் அடங்கும். சென்றாண்டு அங்கு மொத்தம் 69 மரண தண்டனைகள் மேற்கொள்ளப்பட்டன.