கார் ஓட்டி பணம் ஈட்டும் சவூதி பெண்கள்

கார் ஓட்டி பணம் ஈட்டும் சவூதி பெண்கள்

2 mins read
f056a48f-c1fd-4d69-99e4-13e320334194
டாக்சி ஓட்டுநர்களாக மாறியுள்ள சவூதி பெண்களில் ஒருவர். படம்: ஏஎஃப்பி -

சவூதி அரேபிய பெண்கள் கார்களை ஓட்ட 2018ஆம் ஆண்டில்தான் சட்டம் அனுமதித்தது.

நான்கு ஆண்டுகள் கழித்து அந்த நாட்டுப் பெண்களின் குடும்பத்தை ஓட்ட கார் ஓட்டத் தொடங்கி உள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து, 200,000க்கும் அதிகமான பெண்கள் சவூதி அரேபியாவில் கார் ஓட்டும் உரிமம் பெற்றுள்ளனர். கார் விற்பனையும் கூடியுள்ளது.

விலைவாசி உயர்ந்து வருவதால், பெண்கள் பலர் தங்கள் கார்களை வாடகை உந்து வண்டிகளாக மாற்றி வருகின்றனர்.

குறிப்பாக பெண்கள் மட்டுமே பயன்படுத்தும் செயலி மூலம் அவர்களை ஏற்றிச் செல்கின்றனர்.

குடும்பக் கட்டுப்பாடுகளை மீறாமல் குடும்பத்துக்கு உதவ இது அவர்களுக்கு நல்ல வழியாக உள்ளது.

சவூதி அரேபியாவில் கிடுகிடு என்று உயர்ந்துவிட்ட விலைவாசி, பெண்கள் இத்தகைய தொழில்களில் ஈடுபட முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

2020ல் பொருள் சேவை வரி 15 விழுக்காட்டுக்கு உயர்த்தப்பட்டதால், பொருளியல் அழுத்தம் கூடியுள்ளது.

இந்நிலையில் ஒரு காலத்தில் வெளிநாட்டவர் மட்டும் செய்துவந்த வேலைகளை இப்போது சவூதி மக்கள் செய்து வருகின்றனர்.

பொருளியலில் வெளிநாட்டவர் பங்கைக் குறைத்து, கூடுதலான சவூதி அரேபியர்களை வேலை செய்ய வைக்கும் அரசாங்கத் திட்டத்தின் விளைவு அது.

இவ்வாறு வேலை செய்பவர்களில் பெண்களும் அடங்குவர்.

உணவகங்கள், சில்லறை வர்த்தகக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் அதிகப் பெண் ஊழியர்களைக் காண முடிகிறது. தங்கள் உறவினரைத் தவிர வேறு ஆண்களுடன் பழகக்கூடாது என்று காலங்காலமாக கடைபிடிக்கப்பட்ட வழக்கம் இப்போது மாறி வருகிறது.