மிகக்குறைந்த வாக்குப்பதிவு ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி பெரும்பான்மை வெற்றி

மிகக்குறைந்த வாக்குப்பதிவு ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி பெரும்பான்மை வெற்றி

2 mins read
f0516235-d49a-4c7b-90e3-8ce4c0cde592
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் ஜோகூர் பாரு மாநில சட்­ட­மன்­றத் தேர்­த­லில் அம்னோ தலை­மை­யிலான தேசிய முன்­னணி, மூன்­றில் இரண்டு பங்கு பெரும்­பான்மை­யு­டன் வெற்றி பெற்­றது.

56 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட ஜோகூர் மாநில சட்­ட­மன்­றத்­தில் 40 இடங்­க­ளைக் கைப்­பற்­றி­யுள்­ளது தேசிய முன்­னணி. இது பெரும்­பான்மை வெற்­றிக்­குத் தேவை­யான 38 இடங்­க­ளை­விட அதி­கம்.

இத்­தேர்­த­லில் வாக்­க­ளிக்க 1,426,573 பேர் தகுதி பெற்­றி­ருந்­தா­லும் 54 விழுக்­காட்டு வாக்­கு­களே பதி­வா­கின. மலே­சி­யா­வில் அண்­மை­யில் நடந்த மாநி­லத் தேர்­தல்­க­ளி­லேயே ஆக மோச­மான வாக்­குப்­ப­திவு இது.

வேட்­பா­ளர்­கள் குறித்த மலே­சிய வாக்­கா­ளர்­க­ளின் நம்­பிக்கை தேர்­த­லுக்­குப் பிறகு பொய்த்து போவ­தன் கார­ண­மா­கவே, அவர்­கள் வாக்­க­ளிக்க முன்­வ­ர­வில்லை என்று கூறப்­ப­டு­கிறது.

சென்ற ஆண்டு மலாக்கா, சரவாக் சட்­ட­மன்­றத் தேர்­தல்­களில் முறையே, 65, 60 விழுக்­காட்டு வாக்­கு­கள் பதி­வா­கின.

குறை­வான வாக்­குப்­ப­திவு, எதிர்க்­கட்­சி­க­ளி­டையே ஒற்­றுமை இல்­லா­தது இவை இரண்­டுமே, தேசிய முன்­னணி இத்­தேர்­த­லிலும் பெரும்­பான்மை வெற்றி பெற கார­ணம் என்று கூறப்­ப­டு­கிறது.

ஒற்­று­மை­யின்­மை­யால் எதிர்க்­கட்சி வாக்­கு­கள் பிரிந்­து­விட்­ட­தால், 2018ல் 18 இடங்­களை மட்­டுமே கைப்­பற்­றி­யி­ருந்த தேசிய முன்­னணி, இப்­போது 40 இடங்­களை வென்­றுள்­ளது.

2018ல் வெற்றி பெற்­றி­ருந்த பக்­கத்­தான் ஹரப்­பான், கிட்­டத்­தட்ட பாதி வாக்­கு­களை இழந்­து­விட்­டது. 26 விழுக்­காடு வாக்­கு­கள் மட்­டுமே பெற்ற அக்­கூட்­டணி, வெறும்

12 இடங்­க­ளையே வென்­றுள்­ளது.

இத்­தேர்­த­லில் போட்­டி­யிட்ட 15 கட்­சி­களில் குறைந்­த­பட்ச வாக்­கு­களைப் பெறத் தவ­றிய ஐந்து கட்­சி­கள் தங்­க­ளது அனைத்து வைப்பு தொகை­யை­யும் இழந்­து­விட்­டன.

பிகே­ஆர் கட்­சி­யின் ஏழு தொகு­தி­கள் உட்­பட பக்­கத்­தான் ஹரப்­பான் 11 இடங்­களில் வைப்­புத்­தொகையை இழந்­தது.

"குறை­வான வாக்­குப்­ப­திவு விகி­தம் மிக­வும் வருத்­த­ம­ளிப்­ப­தா­க­வும், ஜன­நா­யக ஆட்­சி­மு­றையை அச்­சுறுத்­து­வ­தா­க­வும் உள்­ளது," என்­றார் பிகே­ஆர் கட்­சித் தலை­வர் அன்­வார் இப்­ரா­கிம்.

மலே­சியப் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி, "ஜோகூர் தேர்­தல் முடி­வு­கள், நாடா­ளு­மன்­றத்தை எந்த விதத்­தி­லும் பாதிக்­காது," என்றார்.