உலக அமைதி வேண்டி ஜப்பானில் நடந்தேறிய தீமிதித் திருவிழா

உலக அமைதி வேண்டி ஜப்பானில் நடந்தேறிய தீமிதித் திருவிழா

1 mins read
572d896a-5897-45cb-ab77-a403e2abe491
-
Google News Preferred Icon

'பூக்குழி இறங்குதல்' எனும் தீமிதி திருவிழா இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் நடத்தப்படுவதைப் போன்று ஜப்பானின் தோக்கியோவில் உள்ள மலைக் கிராமமான டகோவாவிலும் நேற்று நடந்தேறியது. கட்டைகள், குச்சிகள் ஆகியவற்றை புத்த துறவிகள் எரித்தனர். எரிந்து கொண்டிருந்த அந்த கரித்துண்டுகளின் மீது புத்த துறவிகள் உட்பட ஏறத்தாழ 1,500 பேர் நடந்து சென்றனர். தங்களது பாதுகாப்புக்காகவும் கிருமிப் பரவலில் இருந்து விடுபடுவதற்காகவும் உலக அமைதி வேண்டியும் அவர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்வதாக டகோவா-சன் யாகூ-இன் புத்தக் கோயில் தெரிவித்தது.

படம்: ராய்ட்டர்ஸ்