கலிஃபோர்னியா: இந்தியன்வெல்சில் டென்னிஸ் போட்டியில் வெரோனிகா குடெர்மெடோவாவிடம் 6-0 6-4 என்ற கணக்கில் தோற்று போட்டியில் இருந்து வெளியேறினார் ஜப்பானின் நவோமி ஒசாகா.
முன்னாள் முதல்நிலை வீராங்கனையும் நான்கு முறை கிராண்ட் சிலாம் பட்டம் வென்றவருமான ஒசாகா இப்போட்டியின் முதல் செட்டில் தோற்ற பிறகு, ரசிகர் ஒருவர் அவரை அவதூறாக பேசிக் காயப் படுத்தினார்.
இதனால் மனவேதனை அடைந்த ஒசாகா, கண்ணீர்விட்டு அழுதார். பிறகு அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு தொடர்ந்து விளையாடினார்.
ஆட்டத்திற்குப் பிறகு பேசிய அவர், தனக்கு நடந்த இந்த சம்பவம், 2001ல் வீனஸ், செரீனா வில்லியம்சிற்கு நடந்ததை நினைவூட்டியதாக சொன்னார்.
"இதற்கு முன்பும் என்னைப் பற்றி அவதூறு பேசியுள்ளார்கள். ஆனால் இந்த அளவிற்குக் காயப் படுத்தியது இல்லை," என்றார் ஒசாகா.

