5 விக்கெட்டுகள் வீழ்த்தினார் பும்ரா

5 விக்கெட்டுகள் வீழ்த்தினார் பும்ரா

1 mins read
01f2a201-cd80-444c-9195-7b25effeea22
-

பெங்­க­ளூரூ: இந்­திய அணிக்கு எதி­ரான இரண்­டா­வது டெஸ்ட் போட்­டி­யின் முதல் இன்­னிங்ஸ் ஆட்­டத்­தில் இலங்கை அணி 109 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்­டது.

நேற்­றைய 2­வது நாள் ஆட்­டத்­தில் இந்­தி­யா­வின் வேகப்­பந்­து­வீச்சுக்கு ஈடு­கொ­டுக்க முடி­யா­மல், இலங்கை அணி அடுத்­தடுத்து விக்­கெட்டை பறி­கொ­டுத்­தது.

இலங்கை அணி சார்­பில் அதி­க­பட்­ச­மாக மேத்­யூஸ் 43, டிக்­வெல் 21 ஓட்­டங்­களும் எடுத்­த­னர். இந்­திய அணி சார்­பில் பும்ரா 5 விக்­கெட்­டு­களை வீழ்த்­தி­னார்.

முன்­ன­தாக இந்­திய அணி தனது முதல் இன்­னிங்­சில் 252 ஓட்­டங்­கள் எடுத்­தது.

இந்­நி­லை­யில் 143 ஓட்­டங்­கள் முன்­னி­லை­யு­டன் தனது இரண்­டா­வது இன்­னிங்­சைத் தொடங்­கி­யது இந்­திய அணி.