அமெரிக்காவின் முன்னைய அதிபர் பராக் ஒபாமாவுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது.
அது குறித்து அவர் தமது சமூக ஊடகப் பக்கங்களில் ஞயிற்றுக்கிழமை (மார்ச் 13) அன்று தெரிவித்தார்.
"ஓரிரு நாள்களாக தொண்டை கரகரப்பாக உள்ளது. மற்றபடி நான் நலமாக உள்ளேன்," என்று அவர் அதில் குறிப்பிட்டார்.
தமது மனைவி மிஷெல் ஒபாமாவுக்கு கிருமித் தொற்று இல்லை என்றும் அவர் கூறினார்.
தாமும் தமது மனைவியும் மூன்றாவது தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பதாக 60 வயது திரு ஓபாமா கூறினார்.
"கிருமித்தொற்றுச் சம்பவங்கள் குறைந்தபோதும், தொற்றால் கடும் நோய் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை இது நினைவூட்டுகிறது," என்றார் திரு ஒபாமா.


