தற்போது பலரும் தங்கத்தில் முதலீடு செய்துகொண்டிருக்கின்றனர். ஒமிக்ரான் வகை கிருமிதொற்று, உக்ரேன் போர் ஆகியவற்றால் அதிகரித்து வரும் பணவீக்கமும் அடிக்கடி அதிக அளவில் மாறும் அதன் விலையும் இதற்கான முக்கிய காரணங்களாகும்.
பயணக் கட்டுப்பாடுகளின் காரணமாக வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வது குறைந்துவிட்டதால் பலரிடத்திலும் செலவு செய்வதற்கு அதிக அளவில் பணம் இருக்கின்றது.
ஆகையால், தங்க நகைகள், கட்டிகள் மற்றும் மின்னிலக்க தங்கம் போன்றவற்றை முதலீட்டாளர்கள் வாங்குவது அதிகரித்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.
உக்ரேன் போரால் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தை கட்டுபடுத்துவதற்கு தங்கம் உதவியாக இருப்பதால், அதன் விலை அதிகரித்துள்ளது. போரின் விளைவுகள் மோசமடைந்தால், அதிக பணவீக்கமும் குறைவான பொருளியல் வளர்ச்சியும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும் என்றும் கூறப்படுகின்றது.
நெருக்கடி காலத்தின்போது பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் தற்போது கிரிப்டோகரன்சி எனப்படும் குறியீட்டு நாணயங்களை விட பிரபலமாக இருக்கின்றது.


