சுமார் 730,000 இலவச முகக்கவசப் பெட்டிகளைப் பெற்றுக் கொண்ட குறைந்த வருமானக் குடும்பங்கள்

சுமார் 730,000 இலவச முகக்கவசப் பெட்டிகளைப் பெற்றுக் கொண்ட குறைந்த வருமானக் குடும்பங்கள்

1 mins read
fd51f9c5-8404-43c0-81c4-3c16aceda9ab
நீலநிற சாஸ் அட்டை வைத்திருக்கும் ஒருவருக்கு இலவக முகக்கவசப் பெட்டிகளை வழங்கினார் ஒரு தொண்டூழியர். தெமாசெக் அறநிறுவனத்தின் ஆக கடைசி முகக்கவச விநியோக நடவடிக்கையில், 730,000க்கும் அதிகமான பெட்டிகளைக் குறைந்த வருமான குடும்பங்கள் இலவசமாக பெற்றுக்கொண்டன.  படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தெமாசெக் அறநிறுவனத்தின் ஆக கடைசி முகக்கவச விநியோக நடவடிக்கையில், 730,000க்கும் அதிகமான பெட்டிகளைக் குறைந்த வருமான குடும்பங்கள் இலவசமாக பெற்றுக்கொண்டன.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் 13ஆம் தேதி வரை தெசமாசெக் அறநிறுவனம் முகக்கவசங்களை வழங்கியது.

இந்த முறை நீல அல்லது ஆரஞ்சு நிற 'சாஸ்' அட்டை வைத்திருப்பவர்களுக்கும் பொது உதவி அட்டைகளை வைத்திருப்பவர்களுக்கும் முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

தெசமாசெக் அறநிறுவனம் இலவச முகக்கவசங்களை இது ஏழாவது முறையாகும்.

குறிப்பாக குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டது இது முதன்முறையாகும்.

கடைத்தொகுதிகளிலும் ஷெங் சியோங், என்டியுசி போன்ற குறிப்பிட்ட பல்பொருள் அங்காடிகளிலும் முகக்கவசங்களை மக்கள் இலவசமாக பெற்றுகொண்டனர்.

சுமார் 900 தொண்டூழியர்கள் இந்த முகக்கவச விநியோக இயக்கத்தில் உதவியதாகவும் முதல் முறையாக பொதுமக்கள் முகக்கவசங்களை விநியோகம் செய்ய அழைக்கப்பட்டனர் என்றும் தெமாசெக் அறநிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.