நேட்டோவிற்கு உக்ரேனிய அதிபர் எச்சரிக்கை

நேட்டோவிற்கு உக்ரேனிய அதிபர் எச்சரிக்கை

2 mins read
23c9749f-6ff4-4d50-be4f-7f6c184feb7f
கியவ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் குடியிருப்புக் கட்டடம் ஒன்று தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி -

கியவ்: நேட்டோ உறுப்பு நாடு­கள் விரை­வில் ர‌ஷ்­யப் படை­க­ளால் தாக்­கப்­ப­டக்­கூ­டும் என்று உக்­ரே­னிய அதி­பர் வொலோ­டி­மிர் ஸெலன்ஸ்கி நேட்­டோவை எச்­ச­ரித்­துள்­ளார்.

போலந்து எல்­லைக்கு அரு­கே­யுள்ள உக்­ரே­னிய ராணு­வத் தளத்தை ர‌ஷ்­யப் படை­கள் தாக்­கி­ய­தைத் தொடர்ந்து அவர் இந்த எச்­ச­ரிக்­கையை வெளி­யிட்­டுள்­ளார்.

ராணு­வத் தளம்மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லில் 35 பேர் மாண்­டு­விட்­ட­னர். 134 பேர் காய­ம­டைந்­த­னர்.

இந்­நி­லை­யில், 'நோ ஃப்ளை ஸோன்' எனப்­படும் உக்­ரேன் வான்­வெ­ளி­யில் விமா­னங்­கள் பறப்­ப­தற்­குத் தடை விதிக்க வேண்­டும் என்ற கோரிக்­கையை அவர் மீண்­டும் கையில் எடுத்­தி­ருக்­கி­றார்.

"ரஷ்­யப் படை­க­ளின் ஏவு­க­ணை­கள் உக்­ரே­னுக்கு மேற்கே போலந்து எல்­லைக்கு மிக­மிக அரு­கில் விழுந்­துள்­ளது. இது நேட்­டோ­வுக்கு ஓர் எச்­ச­ரிக்கை.

"நேட்டோ உறுப்பு நாடு­க­ளை­யும் ரஷ்யா குறி­வைக்­கும் முன்­னர் உக்­ரேன் வான்­ப­ரப்பை 'நோ ஃப்ளை ஸோனாக' அறி­வி­யுங்­கள்," என்று கூறி­னார்.

"சென்ற ஆண்டே, நான் நேட்­டோவை எச்­ச­ரித்­தி­ருந்­தேன். ர‌ஷ்­யா­விற்கு எதி­ராக கடு­மை­யான தடை­க­ளைக் கொண்டு வரா­விட்டால் அது போருக்கு வழி­வகுக்­கும் என்று முன்பே சொன்­னேன். அது­போல் நடந்­து­விட்­டது," என்­றும் அவர் ‌நினை­வூட்­டி­னார்.

இந்­நி­லை­யில், உரங்­க­ளின் விலை மிக வேக­மாக உயர்ந்து வரு­வ­தால், உக்­ரே­னில் போர் நிறுத்தப்­ப­டா­விட்­டால் உல­க­ளா­விய உணவு நெருக்­கடி உரு­வா­கும் என்று ரஷ்ய கோடீஸ்­வ­ரர்­களில் ஒரு­வ­ரான ஆண்டிரி மெல்­னி­சென்கோ கூறி­யி­ருக்­கி­றார். இவர் உரங்­கள், நிலக்­கரி தொழி­ல­தி­பர் ஆவார்.

புட்­டின் உக்­ரேன்­மீது படை­யெ­டுப்­பைத் தொடங்­கி­ய­தில் இருந்து ர‌ஷ்ய செல்­வந்­தர்­கள் பலர் அமைதி கோரி அழைப்பு விடுத்து வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

இதற்­கி­டையே, உக்­ரேன் தலை­நகர் கியவ்­வின் புற­ந­கர் பகு­தி­யான இர்­பி­னில் ர‌ஷ்­யப் படை­கள் தாக்­கு­தல் நடத்தி வரும் நிலை­யில், அங்கு செய்தி சேக­ரிக்­கும் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த 51 வயது அமெ­ரிக்க செய்­தி­யா­ளர் ப்ரென்ட் ரெனாவ்ட் கொல்­லப்­பட்­டார். இச்­சண்­டை­யில் மாண்ட முதல் வெளி­நாட்­டுச் செய்­தி­யா­ளர் இவர். மேலும் இரண்டு செய்­தி­யா­ளர்­கள் குண்­டுக் காயங்­க­ளு­டன் மருத்­து­வ­மனை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

சண்­டை­யால் உக்ரேனிலிருந்து கிட்­டத்­தட்ட 2.8 மில்­லி­யன் பேர், போலந்து, ருமே­னியா உள்­ளிட்ட அண்­டை­நா­டு­களில் அக­தி­க­ளாக தஞ்­சம் புகுந்­துள்­ள­தா­கக் கூறப்­படு­கிறது.

அவர்­கள் அனை­வ­ரை­யும் அண்­டை­நா­டு­கள் இன்­மு­கத்­து­டன் வர­வேற்று வரு­கின்­றன. ஆனால், இவை எத்­தனை நாள்­க­ளுக்­குத் தொட­ரும் என்று தெரி­ய­வில்லை என்று உக்­ரேன் எல்­லையை ஒட்டி­உள்ள போலந்­தின் ஸமோஸ்க் நகர மேயர் கூறி­யுள்­ளார்.

ஒரு சில நாள்­களில் கிட்­டத்­தட்ட 35,000 பேர் வரை வரு­வ­தா­கச் சொன்ன அவர், "அர­சாங்­கத்­தி­டம் இருந்­தும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­டம் இருந்­தும் உத­வி­கள் கிடைக்­கும் என்று நினைத்­தோம். ஆனால், எந்த உத­வி­யும் கிடைக்­க­வில்லை. உக்­ரே­னிய மக்­களைத் தொடர்ந்து அன்­பு­டன் வர­வேற்­க நிதி உதவி வேண்­டும்," என்று அவர் சொன்­னார்.