சென்ற 10ஆம் தேதி உக்ரேனின் துறைமுக நகரமான மரியபோல்மீது, ரஷ்யப் படைகள் ஆக்ரோஷமான தாக்குதலை மேற்கொண்டன.
அப்போது அங்குள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட மூவர் பலியாதானதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகின.
அப்போது காயமடைந்த ஒரு கர்ப்பிணியை உக்ரேன் படையினர் அழைத்துச் சென்ற புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவியது.
அந்த கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த சிசுவும்உயிரிழந்துவிட்டது.
மரியபோலில் தாக்குதலில் இதுவரை 2,187 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்
றன.

