தாய்லாந்தில் கொண்டாடப்படும் யானைகள் தினத்தை முன்னிட்டு தாய்லாந்து தாவரவியல் பூங்காவில் கிட்டத்தட்ட 60 யானைகளுக்கு பழ விருந்தளிக்கப்பட்டது.
8 மீட்டர் நீள மேசையின்மீது ஏறத்தாழ இரண்டு டன் எடை கொண்ட பழங்களும் காய்களும் அடுக்கப்பட்டிருந்தன. அலங்கரிக்கப்பட்ட யானைகள் ,அவற்றை ருசித்து உண்டன.
கிருமிப் பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக பார்வையாளர்களைக் காணாமல் இருந்த யானைகளுக்கு இந்த ஆண்டு இரட்டிப்பு மகிழ்ச்சி. விருந்துடன் சில பார்வையாளர்களையும் கண்டதில் யானைகள் மிகவும் மகிழச்சி அடைந்ததாக பூங்கா அதிகாரி ஒருவர் சொன்னார்.
படம்: ராய்ட்டர்ஸ்

