பெய்ஜிங்: ரஷ்ய போர் தொடர்பாக அமெரிக்கா விதித்திருக்கும் தடை
களின் தாக்கத்தை தவிர்க்க விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது. "சீனா நெருக்கடி தரும் நாடு கிடையாது. அதேபோல தடைகள் தன்னைப் பாதிப்பதை சீனா விரும்பாது," என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார். ஸ்ெபயின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மேனுவலிடம் திங்கட்கிழமை தொலைபேசி வாயிலாக அவர் இதனைத் தெரிவித்தார்.
உக்ேரன் பேர் நிலவரம் குறித்து இருவரும் விவாதித்தபோது பேசிய திரு வாங், தனது சட்ட உரிமை
களைப் பாதுகாக்க சீனாவுக்குத் தெரியும் என்றும் அது அதன் உரிமை என்றும் கூறினார்.
இதற்கிடையே, ரஷ்யா படையெடுக்கத் தொடங்கியதுமுதல் 1.4 மில்லியன் குழந்தைகள் உக்ரேனிலிருந்து ெவளியேறி இருப்பதாக ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு வினாடிக்கு கிட்டத்தட்ட ஒரு குழந்தை அகதியாக மாறிவருவதை இந்த நிலவரம் உணர்த்துவதாகவும் அது குறிப்பிட்டது. "சராசரியாக தினமும் 70,000 குழந்தைகள் உக்ரேனிலிருந்து அகதியாக வெளியேறுகின்றனர்," என ஐநா குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப்பின் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டர் ஜெனிவாவில் தெரிவித்தார். "இதனை நிமி டத்திற்கு 55 குழந்தைகள் அல்லது வினாடிக்கு ஒரு குழந்தை எனகணக்கிடலாம்," என்றார் அவர்.

