விளையாட்டுச் செய்தித் துளிகள்

விளையாட்டுச் செய்தித் துளிகள்

3 mins read
c2ef2329-f537-4fb6-af1e-6e322f363fbd
-

சுகாதாரம், நல்வாழ்வை மையமாக வைத்து சமூக மேசைப் பந்து நிகழ்வு

சிங்கப்பூர்: உலக மேசைப் பந்து அமைப்பின் 'சிங்கப்பூர் ஸ்மேஷ்' சமூக ஈடுபாட்டின் ஒரு பகுதியாக, பல்வேறு வயதுடைய சமூக விளையாட்டாளர்கள் நேற்று முன்தினம் ஓசிபிசி சதுக்கத்தின் மேசைப் பந்துக் கூடத்துக்குச் சென்றனர். 15 வயதுக்குட்பட்ட, 19 வயதுக்குட்பட்ட, பொது மற்றும் மூத்தோர் பிரிவுகள் தவிர ஸ்மேஷ் பிரிவு டிமென்ஷியா, பார்கின்சன்ஸ் நோயை முறியடிக்கும் இரண்டு நிகழ்ச்சிகளையும் முதியோருக்கான மேசைப் பந்துப் போட்டிகளையும் மையமாக கொண்டிருந்தது.

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட 'டேபிள் டென்னிஸ் 4 குட்' என்ற லாப நோக்கற்ற அமைப்பால் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது மூளை மற்றும் ஒட்டு மொத்த ஆரோக்கியம், மறுவாழ்வு, நல்லிணக்கம் ஆகிய வற்றை மேம்படுத்த உதவுகிறது.

"எங்கள் நோக்கம் மிகவும் எளிமையானது. பார்கின் சன்ஸ், டிமென்ஷியா போன்ற நரம்பு தொடர்பான மருத்துவப் பிரச்சினைகள் உள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த விரும்புகிறோம்," என்றார் 'டேபிள் டென்னிஸ் 4 குட்' அமைப்பின் நிறுவனர் சுனில் ராகவன்.

பேலஸ் குழுவுடனான சமநிலை மேன் சிட்டிக்குப் பின்னடைவைத் தந்தது

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் விருதை வெல்லும் வாய்ப்பை வலுவாக்கிக்கொள்ளும் மான்செஸ்டர் சிட்டியின் முயற்சி, கிறிஸ்டல் பேலஸ் குழுவுடனான ஆட்டத்தில் அது பெற்ற 0-0 என்ற சமநிலையால் பின்னடைவைச் சந்தித்து உள்ளது. பெப் குவாடியோலாவின் சிட்டி குழு பேலஸ் கோல் முனையை நோக்கி 18 முறை தாக்குதல் மேற்கொண்டாலும் அவற்றில் ஒன்றுகூட கோலாகவில்லை. புள்ளிப் பட்டியலில் சிட்டிக்கு அடுத்த நிலையில் நான்கு புள்ளிகள் பின்தங்கி யுள்ள லிவர்பூல், இன்று ஆர்சனலைச் சந்திக்கும் ஆட்டத் தில் வெற்றி பெற்றால் அது ஒரு புள்ளி வித்தியாசத்துக்கு நெருங்கி வந்துவிடும்.

கடந்த சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் லிவர்பூல் 2-0 என்ற கோல் கணக்கில் பிரைட்டன் குழுவை வென்று, மேலும் மூன்று புள்ளிகள் பெற்று பட்டியலில் சிட்டிக்கு அடுத்த நிலையில் மிக நெருக்கமாக வந்துவிட்டது.

சொந்த மண்ணில் இந்திய அணியின் 15வது டெஸ்ட் தொடர் வெற்றி

பெங்களூரு: இந்தியா-இலங்கை இடையிலான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மூன்றாவது நாளி லேயே முடிவுக்கு வந்தது. பெங்களூரு சின்னசாமி திடலில் நடைபெற்ற போட்டியின் முதல் நாளிலிருந்தே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் இன்னிங்ஸில் 252 ஓட்டங் களை இந்தியாவும் 109 ஓட்டங்களை இலங்கையும் எடுத்தி ருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 303 ஓட்டங் களை எடுத்து இந்தியா டிக்ளேர் செய்தது. அதனைத் தொடர்ந்து 447 ஓட்டங்கள் எடுத்தால் ெவற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை திங்கட் கிழமை ஆடத் தொடங்கிய இலங்கை, இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க இயலாமல் நேற்று சுருண்டது. இதனால் 238 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. 2-0 என்று டெஸ்ட் தொடரையும் அது கைப்பற்றியது. மேலும், சொந்த மண்ணில் இந்திய அணி தொடர்ச்சியாகப் பெற்றிருக்கும் 15வது டெஸ்ட் தொடர் வெற்றி இது.

உலகத் தரவரிசையில் இந்தியா ஏற்றம்

துபாய்: உலக டெஸ்ட் கிரிக்கெட் வெற்றியாளர் தரவரிசைப் பட்டியலை ஐசிசி எனப்படும் அனைத்துலக கிரிக்கெட் மன்றம் வெளியிட்டுள்ளது. இலங்கையுடனான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியதன் மூலம் இந்தப் பட்டியலில் 58 விழுக்காடு வெற்றியுடன் இந்திய அணி 4வது இடத் துக்கு முன்னேறியுள்ளது. 50% வெற்றியுடன் இலங்கை அணி 5வது இடத்தில் நீடிக்கிறது. 38% வெற்றியுடன் நியூசிலாந்து அணி 6வது இடத்தில் உள்ளது.