பிரிட்டன் தளர்த்துகிறது: கிருமி துரத்துகிறது

பிரிட்டன் தளர்த்துகிறது: கிருமி துரத்துகிறது

1 mins read
543883bf-49bd-468c-bf4b-a5a6ef1c7089
-

லண்­டன்: பிரிட்­டன் நாளை மறு­தி­னம் (மார்ச் 18) முதல் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களை முழு­மை­யா­கத் தளர்த்­து­கிறது. வெளி­நா­டு­களில் இருந்து வரு­வோர் இனி பய­ணி­கள் தட­ம­றி­யும் படி­வத்தை பூர்த்தி செய்ய வேண்­டிய அவ­சி­யம் இருக்­காது.

அதே­போல அவர்­கள் பரி­சோ­தனை நடை­மு­றை­க­ளுக்கு உட்­ப­டுத்த வேண்­டிய தேவை­யும் ஏற்­

ப­டாது என போக்­கு­வ­ரத்து அமைச்­சர் கிரான்ட் ஷேப்ஸ் தெரி­வித்­தார். பய­ணம் தொடர்­பான எல்லா வகை­யான கட்­டுப்­பா­டு­களும் மார்ச் 18 அதி­காலை 4 மணி முதல் (சிங்­கப்­பூர் நேரம் பிற்­ப­கல் 12 மணி) தளர்த்­தப்­படும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

தளர்­வு­களை பிரிட்­டன் அறி­வித்­துள்ள அதே­நே­ரம் ஐரோப்­பா­வின் பல பகு­தி­களில், குறிப்­பாக, ஜெர்­மனி, ஆஸ்­தி­ரியா, நெதர்­லாந்து போன்­ற­வற்­றில் கிரு­மிப் பர­வல் வேக­மெ­டுத்­துள்­ள­தாக புளும்­பெர்க் செய்தி கூறு­கிறது. ஓமிக்­ரான் வகை­யைச் சேர்ந்த பிஏ.2 என்­னும் கிருமி இந்த நாடு­களில் உச்­சம் அடைந் திருப்­ப­தாக அது தெரி­வித்­தது.