'விடிஎல்' விமானப் பயண நடைமுறை: மலேசியா அறிவிப்பு

'விடிஎல்' விமானப் பயண நடைமுறை: மலேசியா அறிவிப்பு

1 mins read
0b085fdb-5036-4cb9-9a08-98de06c30083
-

புத்­ராஜெயா: தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணப் பாதைத் (விடி­எல்) திட்­டத்­தின்­கீழ் விமா­னப் பய­ணங்­களை மேற்­கொள்ள சிங்­கப்­பூர், தாய்­லாந்து, கம்­போ­டியா ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு ஒரே­மா­தி­ரி­யான நடை­முறை பின்­பற்­றப்­படும் என மலே­சியா அறி­வித்­துள்­ளது.

'பரி­சோ­த­னைக்­குப் பின்­னர் பய­ணி­களை அனுப்­ப­லாம்' என்­னும் நடை­முறை இதற்­குப் பயன்­ப­டுத்­தப்­

ப­டும் என மலே­சிய போக்­கு­வ­ரத்து அமைச்­சர் வீ கா சியோங் நேற்று கூறி­னார். அதா­வது, மலே­சி­யா­வில் வந்­தி­றங்­கும் இந்த மூன்று நாடு­

க­ளைச் சேர்ந்­தோர் கொவிட்-19 பரி­சோ­தனை முடிவு வரும்­வரை விமான நிலை­யத்­தில் காத்­தி­ருக்க வேண்­டிய அவ­சி­யம் இருக்­காது.

பரி­சோ­த­னைக்­குப் பின்­னர் தங்­க­ளது இருப்­பி­டத்­துக்கு தனி­யார் போக்­கு­வ­ரத்து, டாக்சி அல்­லது வாடகை வாக­னம் மூலம் செல்­ல­லாம்.

பரி­சோ­தனை முடிவு 24 மணி நேரத்­திற்­குள் அறி­விக்­கப்­படும். அது­வரை பய­ணி­கள் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும் என்­றார் டாக்­டர் வீ.