பெய்ஜிங்: சீனாவில் கொவிட்-19 தொற்று மீண்டும் தலைதூக்கி வேகமாகப் பரவி வருவதன் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள முடக்கநிலையால் கிட்டத்தட்ட 30 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அன்றாட கிருமித்தொற்று எண்ணிக்கை நேற்று தொடர்ந்து ஆறாவது நாளாக 1,000க்கு மேல் பதிவானது.
நாடு முழுவதும் ஓமிக்ரான் வகை கிருமி வேகமாகப் பரவுகிறது. மொத்தம் 5,280 பேருக்கு நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
இது திங்கட்கிழமையைக் காட்டிலும் இருமடங்கு. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நேற்று குறைந்தபட்சம் 13 நகரங்களில் முழுமையான முடக்கநிலை அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் சில நகரங்கள் குறிப்பிட்ட சில நேரங்களுக்கு முடக்கி வைக்கப்பட்டன. வடகிழக்கு ஜிலின் மாநிலம்தான் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் அந்த மாநிலத்தில் 3,000க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்தது.
மாநிலத் தலைநகர் சோங்சுன் உள்ளிட்ட பல நகரங்களின் குடியிருப்பாளர்கள் நேற்று வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சீனாவின் ஆகப் ெபரிய நகராd ஷங்காய் கடுமையான கட்டுப் பாடுகளுக்குள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில கட்டடங்கள் யாரும் செல்லாத வகையில் மூடப்பட்டுள்ளன. தென்சீனாவின் தொழில் நகரான ஷென்ஸெனில் வசிக்கும் 17.5 மில்லியன் மக்களும் மூன்று நாள் முடக்கத்தில் சிக்கி உள்ளனர். அங்குள்ள தொழிற்
சாலைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன.
இதற்கிடையே, லாரி ஓட்டுநர் களுக்கு கிருமிப் பரிசோதனைக் கட்டுப்பாடு காரணமாக சீனா முழுவதும் லாரி போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருள் விநியோகம் தாமதடைந்து வருகிறது. கப்பல் களுக்கு சரக்கு அனுப்பப்படுவதும் பாதிப்படைந்துள்ளது.

